Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

திருமண செய்தி உண்மையா...? குழப்பும் த்ரிஷா குடும்பத்தார்! ஏன் எதற்காக...?

18 நவ, 2014 - 11:22 IST
எழுத்தின் அளவு:

கோலிவுட், டோலிவுட் உள்ளிட்ட தென்னிந்திய சினிமாவில் நேற்று மாலை முதல் ஹாட் டாப்பிக்காக பேசிக்கொண்டு இருப்பது நடிகை த்ரிஷாவின் திருமண செய்தியை பற்றித்தான். த்ரிஷாவுக்கும், தொழிலதிபரும், தயாரிப்பாளருமான வருண் மணியனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதாகவும், மார்ச் மாதம் திருமணம் நடப்பதாகவும் கூறப்படுகிறது, ஆனால் இதனை த்ரிஷா மற்றும் அவரது குடும்பத்தார் மறுத்துள்ளனர். அதேசமயம் த்ரிஷா, வருண் மணியன் உடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இதனால் ஒரே குழப்பமான சூழல் நிலவி வருகிறது.


''லேசா லேசா'' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை த்ரிஷா. தொடர்ந்து விஜய், அஜீத், விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து டாப் நடிகையாக உயர்ந்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் நம்பர்-1 நடிகையாக வலம் வந்தார். தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் இருந்து வருகிறார் நடிகை த்ரிஷா. இப்போதும் கூட நான்கு ஜெயம் ரவியுடன் பூலோகம், அஜீத்துடன் என்னை அறிந்தால், தெலுங்கில் பாலகிருஷ்ணாவுடன் ஒரு படம் என பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.


திருமண நிச்சயம்...?


கடந்த ஓராண்டுக்கு மேலாகவே த்ரிஷாவின் திருமண செய்தி பற்றி வெளியாகி கொண்டிருக்கின்றன. தெலுங்கு நடிகர் ராணா டகுபதியுடன் காதல் கிசுகிசுவில் சிக்கினார். மேலும் இருவரும் ஒன்றாக பல இடங்களுக்கு தனியாக சுற்றியது, அதுதொடர்பான புகைப்படங்கள் எல்லாம் வெளியாகின. இந்நிலையில், நடிகை திரிஷாவுக்கு திடீர் என்று திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது என்ற செய்தி நேற்று மாலை முதல் வெளியாகின. மணமகன் பெயர், வருண் மணியன். சென்னையை சேர்ந்த தொழில் அதிபர். இவர், வாயை மூடி பேசவும், காவியத்தலைவன் படங்களை தயாரித்துள்ளார். த்ரிஷாவின் இல்லத்தில் இருதினங்களுக்கு முன்னர் திருமண நிச்சயம் நடந்தாகவும், அடுத்தாண்டு மார்ச்சில் திருமணம் நடக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.


த்ரிஷா குடும்பத்தார் மறுப்பு


இதனிடையே த்ரிஷா அவருடைய டுவிட்டர் வலைத்தளத்தில் தனது திருமண வதந்தி பற்றி ஒரு பதிவை வெளியிட்டார். “ஹலோ மக்களே...எனக்கு நிச்சயம் எல்லாம் நடக்கவில்லை, இது உங்களுக்கான தகவல். அப்படி ஒன்று நடக்கும் போது அது பற்றிய தகவல் என்னிடமிருந்துதான் முதலில் வரும்,” என அவர் தெரிவித்துள்ளார்.


நடிகை த்ரிஷாவின் அம்மா உமா இதுகுறித்து எமது நிருபரிடம் கூறுகையில், திருமண செய்தி முற்றிலும் பொய்யானது தகவல். திருமணம் முடிவானால் கண்டிப்பாக உங்களிடம் சொல்கிறேன் என்று கூறியுள்ளார்.


அதேசமயம் வருண் மணியன் குடும்பத்தார் தரப்பில், இந்த திருமண செய்தி பற்றி யாரும் மறுப்போ இல்லை உண்மைதான் என்று எந்த செய்தியும் வெளியிடவில்லை.


த்ரிஷா - வருண் மணியன் நெருக்கமான போட்டோ


த்ரிஷாவும், அவரது அம்மா உமா கிருஷ்ணனும், திருமண நிச்சயம் எதுவும் நடக்கவில்லை என்று மறுப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் த்ரிஷாவும், வருண் மணியனும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. இது தான் இப்போது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.


குழப்பும் த்ரிஷா குடும்பத்தார்...? ஏன் எதற்காக...?


வருண் மணியனுக்கும், த்ரிஷாவுக்கும் திருமணம் நிச்சயம் நடந்தது உண்மை தான் கூறுகின்றனர். பிறகு ஏன் த்ரிஷா குடும்பத்தார் மறுக்கின்றனர் என கேள்வி எழுகிறது. அதற்கும் ஒரு காரணம் உண்டு. அதாவது, த்ரிஷா இப்போது 4 படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த சமயத்தில் அவருக்கு திருமணம் நிச்சயமான செய்தி வெளிவந்தால் படத்தின் வியாபாரம் பாதிக்கும் என்று கருதுகின்றனராம். அதனால் தான் த்ரிஷாவும், அவரது அம்மாவும் எல்லா பத்திரிகையாளர்களுக்கும் இப்படி ஒரு மறுப்பு செய்தியை வெளியிட்டு வருவதாக கூறுகிறார்கள்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in