ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
'லிங்கா' படத்தின் புத்தம் புதிய டிரைலர் நேற்று காலை 10 மணியளவில் யு டியூப் வீடியோ இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இன்று காலை 10 மணியுடன் முடிவடையும் 24 மணி நேரத்தில் சுமார் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களை மட்டுமே அந்த டிரைலர் ஈர்த்துள்ளது. விஜய் நடித்த 'கத்தி' படத்தின் டிரைலர், டீசர் ஆகியவை வெளியான 24 மணி நேரத்திற்குள் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களையும், ஷங்கர் இயக்கிய 'ஐ' படத்தின் டீசர் வெளியான 24 மணி நேரத்திற்குள் 10 லட்சத்தைக் கடந்தும் பார்வையாளர்களைப் பெற முடிந்த போது பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'லிங்கா' படத்தின் டிரைலர் இன்னும் 10 லட்சத்தைத் தொடாமல் இருப்பது இணையதள பயன்பாட்டாளர்களிடையேயும், ரஜினிகாந்தின் ரசிகர்களிடையேயும் ஒரு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்று காலை 9 மணியளவில் 'லிங்கா' படத்தின் புதிய தமிழ் டிரைலரை 8,41,860 பேரும், ஹிந்தி டிரைலரை 64,174 பேரும், தெலுங்கு டிரைலரை 2,09,815 பேரும் மட்டுமே கண்டு ரசித்துள்ளனர். ரஜினி ரசிகர்களிடத்திலும், திரையுலகத்தினரிடம் மட்டுமே அதிகப்படியான பாராட்டுக்களைப் பெறும் 'லிங்கா' டிரைலர் சர்வ சாதாரணமாக ஒரே நாளில் சுமார் 20 லட்சம் பார்வையாளர்களைக் கடக்கும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை.
பொதுவாக, ஞாயிற்றுக் கிழமைகளில் இணையதள பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை மற்ற நாட்களை விடக் குறைவாகவே இருக்கும் என்று சொல்கிறார்கள். 'லிங்கா' பட டிரைலர் ஞாயிற்றுக் கிழமை வெளியானதைத் தவிர்த்திருக்கலாம் என இணையதள வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள். அதோடு, இன்றைய சூழ்நிலையில் இணையதளங்களை 18 வயது முதல் 30 வயதுக்கட்பட்டோர்தான் அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் விஜய் ரசிகர்களாகவும், அஜித் ரசிகர்களாகவும்தான் இருக்கிறார்கள். ரஜினிகாந்த்தின் ரசிகர்களாக 40 வயதைக் கடந்தவர்கள்தான் அதிகம் பேர் இருக்கிறார்கள். அவர்களின் இணையதளப் பயன்பாடு என்பது இள வயதினருடன் ஒப்பிடும் போது குறைவுதான் என்றும் அவர்கள் சொல்கிறார்கள்.
ஆனால், ஒரு திரைப்படத்தின் வெற்றி, வசூல் என்பது டிரைலர் மற்றும் டீசர்களின் பார்வையாளர்கள் வரவேற்பைப் பொறுத்தது அல்ல என்பதும் குறிப்பிட வேண்டிய விஷயம். இணையதளப் பார்வையாளர்கள் வேறு, தியேட்டர்களுக்கு சென்று ரசிக்கும் ரசிகர்கள் வேறு என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு விஷயமாகும்.