ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிசாசு படத்தின் டீசர் வெளியிட்டு விழாவில் மைக் முன்பு பேச வந்த டைரக்டர் பாலா, நான் பேசவில்லை. நீங்கள் கேள்வி கேளுங்கள் நான் பதிலளிக்கிறேன் என்றார். அதையடுத்து, நிருபர்களின் சரமாரியான கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.
* கோடம்பாக்கத்தையே தற்போது பேய் பிடிச்சு ஆட்டுது. நீங்களும் ஏன்?
இப்போது பெரும்பாலான படங்கள் ஹரார் கதைகளிலேயே உருவாவதால் அந்த மாதிரி கதையை படமாக்க நினைக்கவில்லை. மிஷ்கின் சொன்ன கதையை மட்டும்தான் கேட்டேன. அதில் நான் இம்ப்ரஸாகி விட்டேன். 10 நிமிசத்தில் கதை சொல்லி இம்ப்ரஸ் பண்ணுவது மிஷ்கினை தவிர யாராலும் முடியாது.
* எப்போதும் நிறைய பேசக்கூடிய மிஷ்கின் இந்த படத்தைப்பற்றி அதிகம் பேசவில்லையே?
இந்த படத்தை ஆரம்பிக்கும்போதே பேச்சை குறைத்து செயலை ஸ்கிரீனில் காண்பிப்போம் என்றேன். அதனால்தான் அவர் அடக்கி வாசிக்கிறார் என்று நினைக்கிறேன்.
* இந்த படத்துக்கு பிசாசு என்று பெயர் வைத்ததின் காரணமென்ன?
நானொரு பிசாசு, மிஷ்கின் இன்னொரு பிசாசு. நாங்க ரெண்டு பேரும் சேர்ந்தா வேறு என்ன பெயர் வைக்க முடியும். இதுதானே பொருத்தமாக இருக்கும். அதனால்தான் பிசாசு என்றே பொருத்தமான தலைப்பை வைத்து விட்டோம். அது மட்டுமின்றி, இந்த கதைக்கும் பிசாசு என்ற தலைப்புதான் சரியாக இருக்கும்.
* உங்களுக்கு பேய், கடவுள் நம்பிக்கை உண்டா?
எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்றாலும் கோயிலுக்கு சொல்வேன். பேய் இருக்கிறதோ இல்லையோ சைத்தான் இருக்கிறது. கீதை, குரான், பைபிள் சொல்வதை நாம் நம்புகிறோமே.
* மிஷ்கின் என்ற பெரிய இயக்குனருக்கு படம் கொடுத்த நீங்கள் புதுமுக இயக்குனர்களுக்கும் கொடுப்பீர்களா?
இந்த ஆண்டே எனது பேனரில் 3 படங்கள் தயாரிக்க நினைத்தேன். ஆனால் பிசாசு மட்டுமே இப்போது தயாராகியிருக்கிறது. இன்னொரு படம் முயற்சி தள்ளிப்போய் விட்டது. அடுத்து ஒரு படம் தயாராகிறது. மேலும், அடுத்த ஆண்டு 3 படங்கள் தயாரிப்பேன். நான் ஒரு படம் இயக்குவேன். 2 படங்கள் திறமையுள்ள மற்ற இயக்குனர்களுக்கு கொடுப்பேன். புதியவரோ, பிரபலமானவரோ யாராக இருந்தாலும் திறமைக்கே முதலிடம் கொடுப்பேன்
* தமிழச்சி தங்கபாண்டியனை உங்கள் படத்தில் பாடலாசிரியராக அறிமுகம் செய்வதாக கூறிய நீங்கள். மிஷ்கின் இயக்கும் படத்துக்கு பாட்டெழுத வைத்து விட்டீர்களே?
எனது படத்தில்தான் அவர்களை பாடல் எழுத வைக்க நினைத்திருந்தேன. ஆனால் மிஷ்கின் முந்திக்கொண்டார். சரி அதுவும் நான் தயாரிக்கிற படம்தானே என்று விட்டுக்கொடுத்து விட்டேன். சகோதரி தமிழச்சி தங்கபாண்டியன் மிக அற்புதமான பாடல்களை தந்திருக்கிறார்.
இவ்வாறு பாலா பதிலளித்தார்.