ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
'மெட்ராஸ்' படம் மூலம் மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்பியுள்ள கார்த்தி தற்போது 'கொம்பன்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடித்து வருகிறார். இந்தப் படத்தையடுத்து கார்த்தி, 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படத்தை இயக்கிய கோகுல் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தில் கார்த்தி ஜோடியாக நயன்தாரா முதன் முறையாக நடிக்கப் போகிறாராம். நயன்தாரா, தற்போது கார்த்தியின் அண்ணன் சூர்யாவுடன் 'மாஸ்' படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
'பாஸ் என்கிற பாஸ்கரன்' படத்திற்குப் பிறகு மூன்று வருடங்களாக தமிழ் சினிமாவில் நடிக்காமலே இருந்தார் நயன்தாரா. கடந்த வருடம் வெளிவந்த 'ராஜா ராணி' படத்தின் மூலம் மீண்டும் ரீ-என்ட்ரி ஆனவர் தற்போது “மாஸ், தனியொருவன், இது நம்ம ஆளு, நண்பேன்டா” ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அடுத்து விஜய்யுடன் அட்லீ இயக்கும் படத்தில் நடிக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதோடு கார்த்தியுடனும் ஜோடி சேர உள்ளார் என்றும் சொல்கிகறார்கள். கார்த்தி தற்போது நடித்து வரும் 'கொம்பன்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும், கோகுல் இயக்கும் புதிய படம் ஆரம்பமாக உள்ளதாம்.
அநேகமாக, நயன்தாரா நடிக்கும் படங்கள் அடுத்த ஆண்டு துவக்கத்திலிருந்து ஒன்றன் பின் ஒன்றாக வெளிவரும். 2015ம் ஆண்டிலும் அவர்தான் தமிழில் முன்னணி நடிகையாக இருக்கப் போகிறார்.