வசூல் கொட்டுது... : 10 நாளில் ரூ.552.70 கோடியை குவித்த ‛துரந்தர்' | ஹனி ரோஸின் ‛ரேச்சல்' படம் ரிலீஸ் ஒத்திவைப்பு | அரசு பேருந்தில் திரையிடப்பட்ட திலீப் திரைப்படம் ; பெண் பயணியின் எதிர்ப்பால் நிறுத்தம் | புத்தாண்டு தினத்தில் அஜித் 64வது பட அறிவிப்பு வெளியாகிறதா? | நான் அழுதால் நீங்கள் சிரிப்பீர்கள் ; சல்மான்கான் வெளிப்படை பேச்சு | கருப்பு படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் சேனல் | மதுப்பழக்கம் துவங்கியது புகுந்த வீட்டில் தான்; நடிகை ஊர்வசி | எம்ஜிஆர் நினைவுநாளில் 'வா வாத்தியார்' வருகிறார்…??? | தயாரிப்பாளர்கள் இல்லாமல் நடந்த 'அகண்டா 2' சக்சஸ் மீட் | பலாத்காரத்துக்கு திட்டமிட்டவர்களும் தண்டிக்கப்பட வேண்டும் : மஞ்சு வாரியர் |
சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் மாரீசன் படத்திற்கான படப்பிடிப்பு கடந்த நான்கு நாட்களாக சென்னை கிழக்கு கடற்கரைச்சாலையில் உள்ள உத்தண்டி என்ற இடத்தில் போடப்பட்ட பிரம்மாண்ட செட்டில் நடைபெற்று வருகிறது.
இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஹன்சிகாவும், ஸ்ருதிஹாசனும் நடிக்கிறார்கள்.
ஹன்சிகாவின் அம்மாவாக ஸ்ரீதேவியும், வில்லனாக நான் ஈ சுதீப்பும் நடிப்பதாக தகவல் அடிபடுகிறது.
சதுரங்க வேட்டை படத்தின் நாயகனான நட்டி என்கிற நட்ராஜ் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இவர் பாலிவுட்டில் முன்னணி ஒளிப்பதிவாளர்களில் ஒருவர்.
கலை இயக்குனர் முத்துராஜ் அமைத்திருக்கும் தர்பார் செட்டில்தான் தற்போது விஜய், ஹன்சிகா பங்குபெறும் பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது.
மாரீசன் படப்பிடிப்பில் கலந்து கொண்ட ஹன்சிகா, தன் முதல் படப்பிடிப்பு அனுபவம் குறித்து ட்வீட் செய்திருக்கிறார்.
விஜய் 58 படத்தின் பாடல் படப்பிடிப்பு... செட், காஸ்டியூம், தயாரிப்புச் செலவு என எல்லாமே மலைக்க வைக்கிறது... அருமையான தொடக்கம்! என்று அதில் குறிப்பிட்டிருக்கிறார்.
தெலுங்கில் வெளியான மகதீரா படத்தைப் போலவே மாரீசன் படத்தின் கதையும், சரித்திர கால பின்னணி, சமகால பின்னணி என இரண்டு காலக்கட்டத்தில் நடக்கிறது. தற்போது சரித்திர காலப் பின்னணியில் நடக்கும் காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகின்றன.




