மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
கமல், பூஜா குமார், ஆண்ட்ரியா, பார்வதி நடித்து வரும் படம் உத்தம வில்லன். ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார். இந்த படத்திற்கு உத்தம வில்லன் என்று தலைப்பு வைத்தது ஏன் என்று கமல் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
உணர்ச்சியும், சந்தோஷமும் நிறைந்த ஸ்கிரிப்ட். சார்லி சாப்ளின், நகேஷ் ஆகியோர் உணர்ச்சியால் நெகிழவும் வைப்பார்கள், சிரிக்கவும் வைப்பார்கள். அப்படி ஒரு படம் இது. அதனால் இந்தப் ஸ்கிரிப்டுக்கு முதலில் பிட்டர் சாக்லெட் என்றுதான் தலைப்பு வைக்க முடிவு பண்ணினோம்.
உடனே கமல் தமிழ்ல தலைப்பு வைக்கல. தமிழை சாகடிச்சிட்டார்னு சொல்வாங்க. அதனால் தமிழில் உத்தம வில்லன் என்று வைத்தோம். வில்லன் என்பதுகூட ஆங்கிலச் சொல்தான். அதற்கும் ஏதாவது பிரச்சினை வருமுன்னு யோசிச்சோம். அதற்கு பிறகுதான் மல்யுத்தம் செய்பவன் மல்லன் என்பது மாதிரி வில் வித்தை செய்பவன் வில்லன் என்ற சொல் இருப்பதால் அதையே வைத்து விட்டோம். உத்தம வில்லன் என்றால் அது சிவனையும், அர்ஜுனனையும் குறிக்கும். கதையிலும் அப்படி ஒரு உட் கருத்து இருக்கு என்கிறார் கமல்.