ரோட்டர்டாம் திரைப்பட விழாவிற்கு செல்லும் ‛மயிலா' | ரஜினி - கமல் இணையும் படம் குறித்து அப்டேட் கொடுத்த சவுந்தர்யா ரஜினி - ஸ்ருதிஹாசன்! | சமந்தாவின் 'மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு தொடங்கியது! | கரூர் சம்பவம் தொடர்பாக விஜய்யை விமர்சித்தாரா சூரி? -அவரே கொடுத்த விளக்கம் | பிரபாஸ் படத்தில் நடிக்கும் பழம்பெரும் நடிகை காஞ்சனா | 'காந்தாரா சாப்டர் 1' படத்திற்கு அல்லு அர்ஜுன் பாராட்டு | விஷ்ணு விஷால் என் என்ஜினை ஸ்டார்ட் செய்து வைத்தார் : கருணாகரன் | ஒரே ஆண்டில் தமிழில் இரண்டு வெற்றிப் படங்களில் அனுபமா பரமேஸ்வரன் | மாஸ்க் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ஓடிடியில் அடுத்த வாரம் வரும் 'லோகா' |
தினா படத்தில் இடம் பெற்ற சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்... உள்ளிட்ட எக்கச்சக்க ஹிட் பாடல்களை எழுதியிருப்பவர் விஜய்சாகர். அவர் இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கும் படம் முள்ளும் மலரும். நாயகனாக சின்னத்திரை தொகுப்பாளராக இருந்து பெண்களின் மனதை கொள்ளையடித்த பிரஜின் நடிக்கிறார். நிஜ வாழ்க்கையில் பெண்களை கவர்ந்ததைப் போல... இந்த படத்திலும் ப்ளேபாயாகவே நடிக்கிறார் பிரஜன். படத்தில் அவருக்கு ஜோடியாக மைதிலி என்ற மலையாள பைங்கிளி அறிமுகமாகிறார். முழுக்க முழுக்க காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் இப்படத்தின் சூட்டிங் 75 சதவீதம் முடிந்து விட்டது. தமிழ் சினிமா இதுவரை கண்டிராத காதல் கதை இது என்று சொல்லும் பிரஜின், இப்போது இறுதிகட்ட சூட்டிங்கில் பிஸியாக இருக்கிறார்.
இந்த படம் முடிந்த கையோடு டைரக்டர் இளங்கோ இயக்கத்தில் போர்வாள் என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்க கமிட் ஆகியிருக்கிறார் பிரஜின். போலீஸ் அதிகாரியாக நடிப்பது பற்றி கூறுகையில், எனக்கு போலீஸ் அதிகாரியாக நடிப்பது பெருமையாக இருக்கிறது. எனது அப்பா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் என்பதால் போலீஸ் அதிகாரியின் பாடி லாங்குவேஜ் நன்றாகவே தெரியும். அம்மாவும் போலீஸ் குடும்பத்தை சேர்ந்தவர். அதனால் சின்ன வயதில் இருந்தே போலீஸ் கனவு உண்டு. போலீசாகத்தான் ஆக முடியவில்லை. போலீஸ் கேரக்டராகவாவது நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். அது இந்த படத்தின் மூலம் நிறைவேறியிருக்கிறது, என்றார். படத்தில் ஹென்றி என்ற புதுமுகமும் இன்னொரு நாயகனாக நடிக்கிறார். முழுக்க முழுக்க ஆக்ஷனை மையப்படுத்தி எடுக்கப்படவுள்ள இப்படத்தில் இடம்பெறும் பாடல்களை ஹரிஹரன், கார்த்திக், கிருஷ்ணா ஐயர், சிலோன் மனோகர் உள்ளிட்ட பிரபல பின்னணி பாடகர்கள் பாடப் போகிறார்கள் என்பது கூடுதல் தகவல்.




