ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
கைவசம் 4 படங்களை வைத்திருக்கிறார் கிருஷ்ணா. ஆனபோதும், விஜயசேதுபதியுடன் நடிக்கும் வன்மம், ஆர்யாவுடன் நடிக்கும் யட்சன் படங்களில் அவருக்கு ப்ளேபாய் வேடங்கள்தானாம். இதைத் தொடர்ந்து நடிக்கும் விழித்திரு, இதயம் படங்களிலும் காதல் சம்பந்தப்பட்ட கதைகள்தானாம்.
இந்த நிலையில், ஆர்யா, விஜயசேதுபதியுடன் நடித்தபோது அவர்கள் இருவருமே ஆக்சன் கேரக்டர்களில் நடித்ததைப்பார்த்த கிருஷ்ணாவுக்கும் இப்போது ஆக்சன் வேடங்களில் நடிக்க வேண்டுமென்ற ஆர்வம் ஏற்பட்டுள்ளதாம். அதனால் இப்போது கமிட்டாகியிருக்கும் படங்களுக்கு பிறகு இனிமேல் ஆக்சன் கலந்த கதைகளாக நடிக்க முடிவெடுத்திருக்கிறாராம்.
அதனால், வித்தியாசமான காதல் கதை, புதுமையான காதல் கதை என்று சொல்லிக்கொண்டு தன்னை முற்றுகையிட்ட இயக்குனர்களிடம், காதலிப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் அந்த கதாபாத்திரங்கள் பொறுப்பில்லாமல் இருக்கக்கூடாது. பொறுப்பான வேடங்களாக இருக்க வேண்டும அப்போதுதான் எனது ஹீரோ இமேஜூம் உயரும் என்கிறாராம். ஆக, ப்ளேபாய் இமேஜிலிருந்து, ஆக்சன் இமேஜூக்கு தாவுகிறார் கிருஷ்ணா.