ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளாகவே அடுத்த சூப்பர் ஸ்டார் நடிகர் யார் என்கிற போட்டி உருவாகியிருக்கிறது. அஜீத்தரப்பினர் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று அஜீத்தை குறிப்பிட்டு வருவதுபோல், விஜய்தரப்பினர் அவரை குறிப்பிட்டு வந்தனர். விஜய்-அஜீத் ரசிகர்களும் அது சம்பந்தமாக இணையதளங்களில் கடுமையாக மோதிக்கொண்டும் வந்தனர்.
இந்த நேரத்தில்தான் ஒரு வார பத்திரிகை விஜய்க்கே அதிக ரசிகர்கள் வாக்களித்ததாக சொல்லி அவர்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று செய்தி வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது. ஆனால், அதையடுத்து எனக்கு எந்த பட்டமும் தேவையில்லை. ஒவ்வொரு முறையும கோல் போடுகிற அத்தனை நடிகர்களுமே சூப்பர் ஸ்டார்கள்தான் என்று ஒரு ஸ்டேட்மென்ட் கொடுத்து அந்த சலசலப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இந்த நிலையில், நேற்று டுவிட்டரில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார் விஜய். அப்போது, கத்தி படத்தின் நடிப்பு குறித்து பெரும்பாலான ரசிகர்கள் அவரை புகழ்ந்தனர். அதற்கு நன்றி சொல்லிய விஜய்யிடம், ஒரு ரசிகர், இளையதளபதி-சூப்பர் ஸ்டார் இந்த இரண்டு பட்டங்களில் உங்களுக்கு எந்த பட்டம் பிடிக்கும் என்று கேட்டார்.
அதற்கு, எந்த பட்டமும் பிடிக்காது. ரசிகர்களின் அன்பு, பாசத்துக்கு முன்பு அதுவெல்லாம் ஒன்றுமே இல்லை என்று பதில் கொடுத்துள்ளார்.