ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இயக்குநர் விஜய்யை திருமணம் செய்து கொண்ட பிறகு கவர்ச்சியாக நடிப்பதில்லை என்று முடிவு செய்துவிட்ட அமலாபால், தற்போது கணவர் விஜய் இயக்கும் படத்தின் தயாரிப்பில் உதவி செய்து வருகிறார். எனவேதான் சமுத்திரக்கனியின் கிட்ணா பட வாய்ப்பையும் மறுத்துவிட்டார். இயக்குனர் விஜய்யை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பாக லைலா ஓ லைலா மற்றும் மிலி ஆகிய இரண்டு மலையாளப்படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டு அட்வான்ஸை வாங்கிப்போட்டிருந்தார் அமலா பால்.
இதில் மிலி படத்தின் படப்பிடிப்பு முடிந்து விரைவில் ரிலீசாகவிருக்கிறது. மலையாளத்தின் முன்னணி இயக்குனரான ஜோஷி இயக்கும் லைலா ஓ லைலா படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடியவில்லை. இப்படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக நடிக்கும் அமலா பால், மூன்று வித்தியாசமான கெட்-அப்களில் நடிக்கிறாராம். ஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்துள்ளார். இப்படத்தில் அமலா பாலின் தம்பி அபிஜித் பாலும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறாராம். திருமணத்திற்கு பிறகு தன் நடிப்பில் வெளியாகவிருக்கும் இப்படம் மாறுபட்ட கதை அமைப்பைக் கொண்டது என்கிறா அமலா பால், தொடர்ந்து மலையாளப்படங்களில் மட்டும் நடிக்க திட்டமிட்டுள்ளார்!