கார்த்திக் சுப்பராஜ், சிவகார்த்திகேயன் புதிய கூட்டணி | தமன்னாவை ஏமாற்றிய ஒடேலா- 2! | சமூக வலைதளங்களில் இருந்து மீண்டும் பிரேக் எடுத்த லோகேஷ் கனகராஜ் | மனைவிகிட்ட சண்டை போட்டுக்கிட்டே இருந்தா வெளியில போய் ஜெயிக்க முடியாது! -நடிகை ரோஜா | டி.ராஜேந்தரின் பாடலை தழுவி உருவாக்கப்பட்ட சூர்யாவின் ரெட்ரோ பட பாடல்! | முன்னேறிச் செல்லுங்கள்- தமிழக கிரிக்கெட் வீரருக்கு சிவகார்த்திகேயன் பாராட்டு! | புதிய விதிகளை அமல்படுத்திய ஆஸ்கர் அகாடமி | என்ன சமந்தா தனது முதல் இரண்டு படங்கள் பற்றி இப்படி சொல்லிட்டார்.... | 'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் |
வேடப்பன், ஒரு சந்திப்பில், சோக்குசுந்தரம் ஆகிய படங்களை இயக்கியவர் ஆனைவாரி ஸ்ரீதர். இதுவரை காதல், காமெடி, செண்டிமென்ட் படங்களை இயக்கிய அவர் அடுத்து ஒரு அதிரடியான திகில் படத்தை இயக்கப் போகிறாராம். இதற்கு முன்பு, பீட்சா, யாமிருக்க பயமேன் என சில திகில் படங்கள் வெளியாகி ரசிகர்களின் அபிமானத்தை பெற்ற நிலையில், அந்த படங்களையெல்லாம மிஞ்சும் வகையில் ஒரு வித்தியாசமான புதுமையான திகில் படத்துடன் அடுத்து களமிறங்குகிறாராம் அவர்.
அப்படம் பற்றி ஆனைவாரி ஸ்ரீதர் கூறுகையில், எனது முதல் படமான வேடப்பனில் காதல் கதையை படமாக்கினேன். அதையடுத்து ஒரு சந்திப்பில் படத்தில் மனைவி மீது சந்தேகப்படும் கணவனால் ஏற்படும் விபரீதத்தை சொல்லியிருந்தேன். அந்த கருத்தை ரசிகர்கள் ஏற்றுக்கொண்டதால் படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது.
அதையடுத்து நான் இயக்கிய சோக்கு சுந்தரம் கடந்த வாரத்தில் வெளியானது. காதலித்துதான் கல்யாணம் செய்து கொள்வேன் என்ற கொள்கையுடன் இருக்கும் ஒரு ஹீரோ. ஆனால் அவன் யாரையெல்லாம் காதலிக்கிறானோ அவர்களுக்கெல்லாம் உடனடியாக திருமணமாகி விடுகிறது. இந்த மாதிரி ஒரு ஜாலியான கதையில் இந்த படத்தை இயக்கியுள்ளேன். படமும் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், அடுத்து ஒரு அதிரடியான அமானுஷ்யம் கலந்த கதையை படமாக்குகிறேன். சமீபகாலமாக தமிழ் சினிமாவில் நிறைய திகில் படங்கள் வந்து கொண்டிருந்தபோதும், இந்த படம் தனித்துவமாக இருக்கும், திகில் படம் என்றாலும் அதில் செண்டிமென்டே அழுத்தமாக இருக்கும் வகையில் கதை உருவாக்கியிருக்கிறேன். மேலும், அடுத்த படத்தில் சொல்லப்போவது பெரிய விசயம். அதனால் ஒரு முன்னணி நடிகை நடித்தால்தான் அந்த வேடத்தை பூர்த்தி செய்ய முடியும் என்பதால், நயன்தாரா அல்லது அனுஷ்காவை நடிக்க வைக்க முடிவு செய்திருக்கிறேன்.
இது சம்பந்தமாக அவர்கள்தரப்பில் பேசி வருகிறேன். இரண்டு பேரில் யார் முதலில் கால்சீட் தருகிறார்களோ அவர்களை வைத்து உடனடியாக படத்தை தொடங்கி விடுவேன் என்று கூறும் ஆனைவாரி ஸ்ரீதர், இந்த படத்தில் ஆடுகளம் நரேன் உள்ளிட்ட சில முக்கியத்துவம் வாய்ந்த கமர்சியல் நடிகர்களும் இடம்பெறுகிறார்கள் என்கிறார்.