விஜய்யின் ‛ஜனநாயகன்' படப்பிடிப்பில் விபத்தில் சிக்கிய லைட் மேன்! | மாடலிங் துறையில் இறங்கிய ஷிவானி நாராயணன்! | மீண்டும் சினிமா படப்பிடிப்பில் பங்கேற்ற பவன் கல்யாண் | ஹைதராபாத்தில் 'ஏஐ' ஸ்டுடியோ திறந்த 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜு | யோகிபாபு மீது தவறு இல்லை: பல்டி அடித்த இயக்குனர் | வயது 42 ஆனாலும், திரையுலகில் 22 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக வலம்வரும் த்ரிஷா | 25வது நாளில் 'குட் பேட் அக்லி' | தலைவனாக விஜய் சேதுபதி, தலைவியாக நித்யா மேனன்! | தீபாவளிக்கு வெளியாகும் பைசன்! | 'தொடரும்' படம் தமிழ் பதிப்பு ரிலீஸ் தேதி அறிவிப்பு! |
ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்து விட்டார் இளையராஜா. மேலும், இப்போதும் தென்னிந்திய படங்கள் மட்டுமின்றி இந்திப்படங்களுக்கும் பிசியாக இசையமைத்துக் கொண்டிருக்கிறார்.அந்த வகையில் தமிழில் மட்டும் ராஜ ராஜனின் போர்வாள், தாரை தப்பட்டை, போர்க்களத்தில் ஒரு பூ, மூங்கில் காடு, கிடா பூசாரி மகுடி. டூரிங் டாக்கீஸ் மற்றும் மகேந்திரனின் படம் உள்பட 10 படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருக்கிறார். தவிர, அமிதாப்பச்சன், தனுஷ் நடிக்கும் ஷமிதாப் மற்றும் சில கன்னட, தெலுங்கு படங்கள் என இசையமைத்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில், முன்பு மாதிரி எந்த படமாக இருந்தாலும், கதையை கேட்டதுமே அவர் இசையமைக்க சம்மதம் சொல்வதில்லையாம். அவர்கள் படமாக்கிய வசன காட்சிகளை திரையில் போட்டு பார்த்த பின்னரே அந்த படங்களுக்கு இசையமைப்பதா? வேண்டாமா? என்பதை முடிவெடுக்கிறாராம். இதற்கு காரணம் சில புதுமுக டைரக்டர்களின் படங்களுக்கு இசையமைத்தபோது அதன் காட்சிகள் சரியாக படமாக்கப்படவில்லையாம்.
முக்கியாக, அவருக்கு பின்னணி இசையமைக்க போதுமான இடம் கொடுக்காத அளவுக்கு காட்சிகளில் வசனங்கள் பேசப்பட்டிருந்ததாம். அதெல்லாம் புதுமுக டைரக்டர்களின் படங்களாம். அதனால் இப்போது சில முன்னணி டைரக்டர்களை தவிர, புதியவர்களாக இருந்தால், அவர்களிடம் முதலில் வசன காட்சிகளை படமாக்கி விட்டு வாருங்கள். அதைப்பார்த்து விட்டுத்தான் உங்கள் படங்களுக்கு இசையமைப்பது பற்றி என்னால் முடிவு சொல்ல முடியும் என்று கூறி விடுகிறாராம்.
இது சிலருக்கு அதிர்ச்சியாக இருந்தாலும், அவர் நன்றாக படமாக்க வேண்டும் என்பதற்காகத்தானே அப்படி சொல்கிறார் என்பதை புரிந்து கொள்ளும் இயக்குனர்கள் இளையராஜாவின் இந்த புதிய கொள்கையை வரவேற்றுள்ளனர்.