ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ரோஜாக்கூட்டம் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்த காமெடி நடிகர் மகாதேவன் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 42. தமிழ் சினிமாவின் இரட்டையர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் சகாதேவன், மகாதேவன், மிகவும் அதிக எடை கொண்ட இந்த இரட்டையர்கள் இணைந்து பல படங்களில் நடித்துள்ளனர், சினிமா தவிர்த்து ஏராளமான சின்னத்திரை நாடகங்களிலும் நடித்துள்ளனர். அதிமுக ஆதரவாக பிரச்சாரங்களிலும் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் சகாதேவன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் உடல்நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்த நிலையில், இன்று(நவ, 5ம் தேதி) அவரது மற்றொரு சகோதரரான மகாதேவனும் காலமானார்.
சர்க்கரை நோயினால் அவதிப்பட்ட வந்த மகாதேவன், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார், கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் சர்க்கரை நோய் அதிகமாக அவரது வலது காலை எடுக்கும் சூழல் வந்தது. காலை அகற்றியும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை, இதனால் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் அனுமதிக்கப்பட்டிருந்த மகாதேவன், சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.
மகாதேவனுக்கு, சாந்தி என்ற மனைவி இருக்கிறார். மறைந்த மகாதேவனின் உடல், சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது, அவரது இறுதிசடங்கு வியாழக்கிழமை நடைபெற இருக்கிறது.