ஹைதராபாத்தில் 'ஏஐ' ஸ்டுடியோ திறந்த 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜு | யோகிபாபு மீது தவறு இல்லை: பல்டி அடித்த இயக்குனர் | வயது 42 ஆனாலும், திரையுலகில் 22 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக வலம்வரும் த்ரிஷா | 25வது நாளில் 'குட் பேட் அக்லி' | தலைவனாக விஜய் சேதுபதி, தலைவியாக நித்யா மேனன்! | தீபாவளிக்கு வெளியாகும் பைசன்! | 'தொடரும்' படம் தமிழ் பதிப்பு ரிலீஸ் தேதி அறிவிப்பு! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் புதிய அப்டேட்! | சூர்யா 46வது படத்தின் டிஜிட்டல் உரிமம் இத்தனை கோடியா? | கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் - வெள்ளிவிழா ஆண்டில் ரீரிலீஸ் அறிவிப்பு |
என்னை அறிந்தால் படத்தின் பெரும்பகுதி வசன காட்சிகள் படமாகி விட்ட நிலையில், சமீபத்தில் சென்னையில் செட் அமைத்து ஒரு பாடல் காட்சியை பிரம்மாண்டமாக படமாக்கியிருக்கிறார் கெளதம்மேனன். அந்த பாடலை பாட்ஷா படத்தில் ரஜினி ஆடிப்பாடும் ரா ரா ராமைய்யா பாடல் போன்று அவருடன் ஏராளமான நடன கலைஞர்களும் இணைந்து நடனமாடுகிறார்களாம்.
குறிப்பாக, பாட்ஷா படப்பாடலில் ரஜினியுடன் வில்லன்களும் அந்த பாடலில் தோன்றுவது போன்று இந்த படத்தில் அஜீத்துடன் அவருக்கு மறைமுக வில்லன்களாக நடிப்பவர்களும் இணைந்து நடனமாடுகிறார்களாம். குறிப்பாக, அப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் வில்லன் நடிகரும், அஜீத்துடன் பாடல் முழுக்க நடனமாடியிருக்கிறாராம்.
மேலும், இரண்டு பேருமே நன்றாக நடனமாடிக்கூடியவர்கள் என்பதால், அவர்களுக்கு வித்தியாசமான ஸ்டெப் வைத்து நடன அசைவுகள் உருவாக்கப்பட்டிருக்கிறதாம். இந்த பாடல், படத்துக்கு இசையமைத்திருக்கும் ஹாரிஸ் ஜெயராஜ்க்கு மிகவும் பிடித்தமான பாடலாம். அதனால் அப்பாடல் படப்பிடிபபு நடைபெற்றபோது தானும் ஸ்பாட்டுக்கு வந்து ஒரு ரசிகரைப்போன்று பார்த்து ரசித்தாராம் ஹாரிஸ்.