ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
தனது மகன்களுக்கு நமது கலாச்சாரம் மற்றும் மத வரலாற்றை பரிசாக அளிக்க திட்டமிட்டாராம் இயக்குனர் ஹாரி பவிஜா. அதற்காக சார் சாகிப்சாதி என்ற படத்தை அவர் இயக்கி முடித்துள்ளார். இது தான் பாலிவுட்டின் முதல் கேப்சர் ரியாலிஸ்டிக் படமாம்.
இந்த படம் ஹாரி பவிஜா கூறுகையில், இந்த படத்தை நான் எனது மகன்களுக்காக மட்டுமல்ல, நமது கலாச்சாரம், மதம் குறித்த வரலாறு ஆகியவற்றை மறந்து போன உலகில் உள்ள அனைத்து குழந்தைகளுக்காகவும் தான் இயக்கி உள்ளேன். நமது கலாச்சாரமும், மதமும் தான் நாம் நினைத்து பெருமை கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம். ஆனால் அதை இன்றைய தலைமுறையினர் மறந்து விட்டனர். அது அவர்கள் தவறு கிடையாது. மதம் என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தமும், அதன் வரலாற்றையும் பற்றிய அறிவும் எதிர்கால சந்ததிக்கு கூறப்படாமல் விட்டதே அதற்கு காரணம்.
பஞ்சாப்பில் வசிக்கும் 80 சதவீதம் குழந்தைகளுக்கு அவர்களின் கலாச்சாரம் பற்றி தெரியாது என்பது மிகவும் வருத்தப்பட வேண்டிய விஷயம். நாம் மறந்த விஷயங்களை நமது சந்ததிக்கு ஞாபகப்படுத்த வேண்டும் என்றார்.
சார் சாகிப்சாதி படம் குரு கோவிந்த் சிங்கின் 4 மகன்கள் மதத்திற்காக செய்த தியாகங்கள் பற்றிய கதையாம். இந்த படம் இந்தி, ஆங்கிலம் மற்றும் பஞ்சாபி ஆகிய 3 மொழிகளில் 3டி மற்றும் 2டி யில் வெளியிடப்பட உள்ளதாம். குருநானக் ஜெயந்தியான நவம்பர் 6ம் தேதியன்று இந்த படம் வெளியிடப்பட உள்ளதாம்.