ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
எக் வில்லன், ஹைடர் போன்ற படங்களின் மூலம் பிரபலமானவர் நடிகை ஸ்ரத்தா கபூர். இவர் இப்போது குத்துப்பாட்டு நடிகையாகிவிட்டார். கரண் ஜோகர் தயாரிப்பில் உருவாகும் ''அங்கிளி'' படத்தில் இம்ரான் ஹாஸ்மி, கங்கனா ரணாவத் ஹீரோ, ஹீரோயினாக நடிக்கின்றனர். ரென்சி டி சில்வா இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தில் ஒரு குத்துப்பாட்டு ஒன்று இருக்கிறது. இந்தப்பாட்டிற்கு ஆட பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோனை முதலில் அழைத்தார்கள், ஆனால் என்ன நினைத்தாரோ இம்ரான் ஹாஸ்மி, சன்னி லியோனை வேண்டாம் என்று மறுத்துவிட்டார். இதனையடுத்து நடிகை ஸ்ரத்தா கபூரை இந்தப்பாட்டிற்கு ஆட அழைத்துள்ளனர். ஸ்ரதா கபூர் மறுப்பு ஏதும் சொல்லாமல் ஓ.கே. சொல்லிவிட்டார்.
இதுகுறித்து ஸ்ரதா கபூர் கூறுகையில், இந்தப்பாட்டிற்கு என்னை ஆட அழைத்தபோது இது புரொமோஷனல் சாங்கா இல்லை, குத்துப்பாட்டு என்ற குழப்பத்தில் இருந்தேன். ஆனால் இது வித்தியாசமான பாடல், இதற்கு முன்னர் இப்படி ஒரு பாடலை ரசிகர்கள் பார்த்திருக்க மாட்டார்கள், இந்தபாடலில் கிளாமர் கொஞ்சம் அதிகமாக இருக்கும். 'டான்ஸ் பசந்தி' எனும் டைட்டீல் பாடலுக்கு பாஸ்கோ சீசர் நடனம் அமைத்துள்ளார். நானும், இம்ரான் ஹாஸ்மியும் ஆடியுள்ளோம். இந்தப்பாடலை திரையில் காண ரசிகர்கள் மட்டுமல்ல, நானும் ரொம்ப ஆவலாய் இருக்கிறேன் என்று கூறியுள்ளார். மேலும் 'ஷோலே' படத்தில் ஹேமமாலினி ஆடிய பசந்தி பாடலா என்று ஸ்ரத்தா கபூரிடம் கேட்டால் நிச்சயமாக சில ஒற்றுமைகள் இருக்கும். இது இந்தக்கால பசந்தி பாடல் என்றார்.