ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாண்டிராஜ் இயக்கிய பசங்க படத்தில் நடித்த சிறுவர்களான ஸ்ரீராம், கிஷோர், பாண்டி, குட்டிமணி ஆகியோர் விடலை பையன்களாக கோலிசோடா படத்தில் நடித்தார்கள். இப்போது வஜ்ரம் என்ற படத்தில் மீண்டும் இணைந்து நடிக்கிறார்கள். இவர்களுடன் பவானி ரெட்டி என்ற புதுமுகம் ஹீரோயினாக நடிக்கிறார்.
உளவுத்துறை, ஜனனம் படங்களை இயக்கிய எஸ்.டி.ரமேஷ் செல்வன் இதனை இயக்குகிறார். "மக்களுக்கு இலவசமாக கிடைக்க வேண்டிய கல்வி வியாபாரமாகிவிட்டது. மக்கள் தங்களின் அடிப்படை உரிமையான கல்வியை பணம் கொடுத்து வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்த பிரச்னை படிக்கும் மாணவர்கள் மத்தியில் எந்த விதமான மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதை சொல்லுகிற படம்.
ஏ.ஆர்.குமரேசன் ஒளிப்பதிவு செய்கிறார், பைசல் இசை அமைக்கிறார். சென்னை, மூணார், சாலக்குடி பகுதியிலும், ஒரு பகுதி படம் அஸ்ஸாம் மாநிலத்திலும் படமாக்கப்படுகிறது" என்கிறார் ரமேஷ் செல்வன்.