மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
சூர்யா-அசின் நடிப்பில் கஜினி படத்தை இயக்கியவர் ஏ.ஆர்.முருகதாஸ். அதையடுத்து இந்தியில் அதே படத்தை அமீர்கானை வைத்து இயக்கியபோது அவருக்கு ஜோடியாக தமிழில் நடித்த அசினையே அழைத்து சென்றார் அவர். அந்த படம் இந்தியிலும் ஹிட்டடித்ததால் அதன்பிறகு தென்னிந்திய படங்களை ஓரங்கட்டிவிட்டு இந்தியில் முன்னணி நடிகையாகி விட்டார் அசின்.
அதைத் தொடர்ந்து, இப்போது தமிழில் கத்தி படத்தை இயக்கியுள்ள ஏ.ஆர்.முருகதாஸ் தனது அடுத்த படத்தை இந்தியில் இயக்குகிறாராம். ஆனால் கத்தியை ரீமேக் செய்யவில்லையாம். அருள்நிதி நடித்த மெளனகுரு படத்தை சில திருத்தங்களுடன் இயக்கப்போகிறாராம். முக்கியமாக, அருள்நிதி நடித்த வேடத்தில் சோனாக்ஷி சின்ஹா நடிக்கிறாராம். அந்த அளவுக்கு ஒரு வித்தியாசமான கோணத்தில் அந்த படத்தின் கதையை மாற்றுகிறாராம்.
அதோடு, தனது கத்தி படத்தில் நடித்த சமந்தாவை இந்த முறை அவர் இந்திக்கு கொண்டு செல்லப் போவதில்லையாம். மாறாக, இசையமைப்பாளர் அனிருத்தை கூட்டிச் செல்கிறாராம். அந்த அளவுக்கு கத்தி படத்துக்கு அனிருத் கொடுத்த இசை அவரை வெகுவாக கவர்ந்துள்ளதாம். அதனால் கோலிவுட்டின் கொலவெறி அனிருத், அடுத்து பாலிவுட்டிலும் தனது கொலவெறி தாக்குதலைத் தொடங்கப் போகிறாராம்.