விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் வாரிசு, அபிஷேக் பச்சன். குரு, பா உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருப்பவர், இப்போது ஷாரூக்கான் உடன் இணைந்து ''ஹேப்பி நியூ இயர்'' படத்தில் நடித்துள்ளார். இப்படம் தீபவாளி விருந்தாக அக்டோபர் 24ம் தேதி வெளியாக இருக்கிறது. சென்னை வந்திருந்த அபிஷேக், தினமலருக்கு அளித்த தீபாவளி சிறப்பு பேட்டி இதோ...
* உங்கள் தீபாவளி கொண்டாட்டம் எப்படி இருக்கும்?
ஒவ்வொரு வருஷமும், பண்டிகைக் காலங்களில் குறிப்பா தீபாவளிக்கு குடும்பத்தோடு மும்பை வீட்டில் கொண்டாடுவது வழக்கம். வீட்டில் லஷ்மி பூஜா செய்து, பலவகை பலகாரங்கள் பகிர்ந்து கொள்வதோடு, நிறைய நண்பர்களோடு பண்டிகையை கொண்டாடுவது வழக்கம். பெரிய உற்சாகத்தை தரும் தீபாவளி பண்டிகை.
* நீங்க விரும்பி சாப்பிடும் ஒரு ஸ்வீட் எது?
மைசூர்பாக். இதுதான் நான் விரும்பி சாப்பிடும் ஸ்வீட், எனக்கு ரொம்ப பிடிக்கும்.
* தமிழ் பேச தெரியுமா?
கொஞ்சம் கொஞ்சம் தெரியும், பேசுவதும் புரியும் நோ பிராப்ளம்.
* எப்ப நேரடி தமிழ் படங்களில் நடிக்க போறீங்க?
நல்ல கதை இருந்தா நீங்க சொல்லுங்க, நான் நடிக்க ரெடியா இருக்கேன்.
* தீபாவளிக்கு ரீலீசாக உள்ள ஹேப்பி நியூ இயர் படத்தில் உங்க ரோல் என்ன?
நந்து என்ற கதாபாத்திரத்தில் நடிச்சிருக்கேன், ரொம்ப நல்ல ரோல், நிறைய காமெடி இருக்கும், ஷாருக்கில் இருந்து எல்லாரும், ஒரு பெரிய டீம் ஒர்க் செய்திருக்கோம், நல்லா உழைச்சிருக்கோம். படம் பார்த்து சொல்லுங்க, கண்டிப்பா உங்க எல்லாருக்கும் படம் பிடிக்கும்.
* தமிழ்ல உங்களுக்கு ரொம்ப பிடித்த நடிகர், நடிகை யார்?
விக்ரம் சார் ரொம்ப பிடிக்கும், அவர் உழைப்பு சான்சே இல்லை. ஹீரோயின்ல ஜோதிகா நடிப்பு ரொம்ப பிடிக்கும். அவங்க திரும்ப நடிக்க வர்றது சந்தோஷமா இருக்கு.
* தமிழ்ல எந்த இயக்குநர் படத்தில் நடிக்க ஆசைப்படுகிறீங்க?
ஐ லவ் மணிரத்னம். அவருக்கு அடுத்து ஷங்கர் சார், பாலா, லிங்குசாமி.
* சென்னை பிடிச்சிருக்கா சொல்லுங்க?
கண்டிப்பா, குரு பட சூட்டிங் இங்க தான் நடந்தது, ஐஸ், நிறைய இடங்கள் காட்டிருக்காங்க, நிறைய டைம் சென்னை வந்து போயிருக்கேன். நான் 3 படங்களில் சூட்டிங் சென்னையில் நடந்திருக்கு, எனக்கும் சென்னைக்கும் நல்ல உறவு இருக்கு.
* இப்போது வரும் தமிழ்படங்களை பார்த்திருக்கிங்களா?
நிறைய படங்களை பார்க்க முடியல. கொஞ்சம் டைம் கிடைக்கல. ஆனா, ஷங்கர்-கென்னி (விக்ரம்) படத்தை பார்க்க ரொம்ப ஆர்வமா இருக்கேன்.
* தமிழ் இன்டஸ்ட்ரி பத்தி என்ன நினைக்கிறீங்க?
ஐ லவ் தமிழ் சினிமா, நல்ல நல்ல படங்களா கொடுக்கிறாங்க. ஒரு ரசிகனா, தமிழ் படங்களை ரசித்து பார்க்கிறேன்.
* தமிழ்ல எந்த மாதிரி ரோலில் நடிக்க ஆசை இருக்கு?
எந்த ரோல் கொடுத்தாலும் நடிக்க நான் ரெடி. அது இங்க இருக்கும் இயக்குநர்கள் கையில்தான் இருக்கு.
* ஹிந்தி படங்கள் போல தமிழில் எந்த நடிகர்கள் கூட சேர்ந்து நடிக்க ஆசை?
விஜய், சூர்யா, தனுஷ், மாதவன் என் பழைய கால நண்பன், அப்புறம் விக்ரம் கூட சேர்ந்து நடிக்க விரும்புறேன்.
* உங்கள் மகள் ஆராத்யா?
என் அன்பு செல்லம் அவர், இரண்டரை வயதாகிறது. படு சுட்டி, அவளின் ஒவ்வொரு அசைவுகளையும் ரசிக்கிறேன்.
* ரசிகர்களுக்கு சொல்ல விரும்புவது?
என்னை இவ்ளோ தூரம் கொண்டு போனது ரசிகர்கள் தான், அவங்க இல்லனா நான் இல்ல. அவர்கள் எல்லாருக்கும் இந்த நேரத்தில் நன்றி சொல்ல வாய்ப்பு கொடுத்த தினமலருக்கும் என் ஸ்பெஷல் நன்றி.