கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
தெலுங்கில் புகழ் பெற்ற டிவி வர்ணனையாளராக இருந்த சுவாதி, தெலுங்குப் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அதன் பின் 2008ல் வெளிவந்த சுப்பிரமணியபுரம் படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானார். சில மலையாளப் படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் தொடர்ந்து “போராளி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வடகறி” ஆகிய படங்களில் நாயகியாக நடித்தார். தற்போது “அமளி துமளி, யட்சன்” ஆகிய தமிழ்ப் படங்களிலும், டபுள் பேரல் என்ற மலையாளப் படத்திலும் நடித்து வருகிறார்.
திரையுலகில் அறிமுகமாகி ஒன்பது வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் சுவாதி தற்போது திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளாராம். கடந்த சில மாதங்களாகவே அவருடைய திருமணத்தைப் பற்றி பல்வேறு விதமான வதந்திகள் பரவி வந்தன. அவற்றிற்கெல்லாம் மறுப்பு தெரிவித்த சுவாதி, தற்போது திருமணம் பற்றிய தகவலை அவரே சொல்லியிருக்கிறார்.
“சில நாட்களுக்கு முன் எனது பெற்றோரிடம், திருமணம் செய்து கொள்ளும் எனது சம்மதத்தை தெரிவித்து விட்டேன். அவர்களும் மாப்பிள்ளையை தேட ஆரம்பித்து விட்டனர். சரியான நேரத்தில் சரியாக எடுக்கும் முடிவு சரியான வெற்றியைத் தரும். எனது அப்பாவும், அம்மாவும் நான் திருமணம் செய்து கொள்ள இதுதான் சரியான வயது எனத் தெரிவித்தனர். அவர்களது முடிவுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்றுதான் எனது சம்மதத்தையும் தெரிவித்தேன்,” எனக் கூறியுள்ளார்.
ஒரு வழியாக திருமண வதந்திகளுக்கு நிரந்தர முற்றுப் புள்ளி வைத்து விட்டார் சுவாதி.