ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
பிரபுசாலமன் இயக்கிய மைனா படத்திற்கு பிறகு தான் டி.இமானின் பரபரப்பான இன்னிங்ஸ் ஆரம்பமானது. அதற்கு முன்பே பத்து ஆண்டுகளுக்கு மேலாக அவர் பீல்டில் இருந்தபோதும் மைனாவின் ஹிட்டுதான் அவரை ரசிகர்களிடம் முழுசாக கொண்டு சேர்த்தது. அதன்பிறகு தொடர்ச்சியாக ஹிட் கொடுத்து தற்போது முன்னணி இசையமைப்பாளராகியிருக்கிறார்.
ஆனபோதும், மைனா படம் என்பது அவரது கேரியரில் மிக முக்கியமான படமாகி விட்டது. அதனால் அந்த படத்தை இயக்கிய பிரபுசாலமனும் இமானுக்கு முக்கியமான இயக்குனராகி விட்டார். அதன்பிறகு அவர் இயக்கிய கும்கி படத்திற்கும் மைனா படத்தைப் போன்றே சூப்பர் ஹிட் பாடல்களாக கொடுத்தார் இமான்.
அதையடுத்து இப்போது பிரபுசாலமன் இயக்கியுள்ள கயல் படத்திற்கும் இசையமைத்திருக்கிறார். ஆனால் அவரது முந்தைய இரண்டு படங்களையும் விட இந்த படத்தின் கதை என் மனதை அதிகமாக டச் விட்டது. கடைசி 20 நிமிட சுனாமி க்ளைமாக்ஸ் காட்சிகளைப் பார்த்துவிட்டு எவரும் கண்கலங்காமல் இருக்கவே முடியாது. அந்த அளவுக்கு அந்த காட்சியை புதுமையான லொகேசனில் அபாரமாக படமாக்கியிருக்கிறார். அதிலும் இந்த படத்தின் லீடு ரோலில் நடித்துள்ள ஆனந்தி என்கிற கயலின் கேரக்டர் ரொம்ப அற்புதமாக வந்திருக்கிறது. அந்த கதாபாத்திரத்தை உணர்ந்து அருமையாக நடித்திருக்கிறார் என்று கயல் பற்றி கூறியுள்ளார் டி.இமான்.