ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ரஜினி நடித்து வரும் லிங்கா படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடித்து வருபவர் சோனாக்ஷி சின்ஹா. பாலிவுட் நடிகர் சத்ருகன் சின்ஹாவின் மகளான இந்த சோனாக்ஷி தான் தற்போது பாலிவுட்டில் வேகமாக வளர்ந்து வரும் நடிகை. பிரபுதேவா இயக்கிய 3 படங்களில் தொடர்ந்து நாயகியாக நடித்து வருகிறார். அதனால் அவர்களைப் பற்றிய கிசுகிசுக்களும் பாலிவுட்டில் பரவிக்கிடக்கிறது.
இந்த நிலையில், கோலிவுட்டில் இருந்து பாலிவுட்டுக்கு சென்று படங்கள் இயக்கி வரும் தமிழ் இயக்குனரான ஏ.ஆர்.முருகதாசும் அடுத்து இந்தியில் தான் இயக்கும் படத்தில் சோனாக்ஷி சின்ஹாவைதான் முக்கிய பாத்திரத்தில் நடிக்க வைக்கிறாராம். மேலும், கத்தியைத் தொடர்ந்து தான் இந்தியில் இயக்கும் அந்த படத்திற்காக தமிழில் அருள்நிதி நடிப்பில் வெளியான மெளனகுரு படத்தின் ரைட்ஸை அவர் வாங்கியிருக்கிறாராம்.
ஆனால் அந்த கதையை அப்படியே இந்தியில் இயக்கப் போவதில்லையாம். தமிழ் பதிப்பில் நாயகனாக நடித்த அருள்நிதியின் கேரக்டரில் இந்தி படத்தின் நாயகியான சோனாக்ஷி சின்ஹாவை நடிக்க வைக்கிறாராம். அவர் கேரக்டர் மட்டுமின்றி இன்னும் ஓரிரு கேரக்டரும் இதே போல உல்டா பண்ணும் அவர், தமிழில் இனியா நடித்த கதாபாத்திரத்தில் சில திருத்தங்கள் செய்து வெயிட் ரோலாக மாற்றுகிறாராம்.
தற்போது கத்தி பட வேலைகளில் தீவிரமாகியிருக்கும் முருகதாஸ், அப்படத்தின் ரிலீசுக்குப்பிறகு மீண்டும் இந்திக்கு சென்று அப்படத்தை ரீமேக் செய்யும் வேலைகளில் இறங்கயிருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன.