ஹீரோ ஆனார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | ‛சக்தி திருமகன்' முதல் ‛ஓஜி' வரை : இந்த வார ஓடிடி ஸ்பெஷல்....! | 'பைசன்' படத்தை பாராட்டிய பா.ஜ.,வின் முன்னாள் தலைவர் அண்ணாமலை! | ஹாட்ரிக் ரூ.100 கோடி வசூலை தந்த பிரதீப் ரங்கநாதன் | அக்டோபர் 31ல் நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் தனுஷின் இட்லி கடை! | 5 நிமிட நடனத்திற்கு ஐந்து கோடி சம்பளம் வாங்கும் பூஜா ஹெக்டே! | கருத்த மச்சான் பாடலுக்கு மமிதா பைஜூ அசத்தல் நடனம் ! வைரலாகும் வீடியோ!! | கிண்டல் செய்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த சூரி | 'பராசக்தி' பாடல்கள் விரைவில்… ஜிவி பிரகாஷ் தகவல் | கதை நாயகியான கீதா கைலாசம் |
விஜய்க்கு எந்த அளவிற்கு வரவேற்பு இருக்கிறது என்பதை சமீபத்தில் வெளியிடப்பட்ட கத்தி படத்தின் டீசர்களும், டிரைலர்களும் நிரூபித்து வருகின்றன. ரஜினிகாந்திற்கு அடுத்து தமிழ்த் திரையுலகில் விஜய்தான் சூப்பர் ஸ்டார் என செய்திகள் வெளிவந்த போது பலரும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஆனால், தமிழ்த் திரையுலகில் வியாபார ரீதியில் ரஜினிகாந்த்திற்கு அடுத்த இடத்தில் விஜய்தான் இருக்கிறார் என வினியோகஸ்தர்கள் தெரிவிக்கிறார்கள்.
அந்த இடத்தை கடந்த சில நாட்களாக வெளியிடப்பட்டு வரும் கத்தி படத்தின் டீசர்களும், டிரைலர்களும் நிரூபித்து வருகின்றன. யு டியுப் வீடியோ இணையதளத்தில் மூன்று நாட்களுக்கு முன்னதாக கத்தி படத்தில் இடம் பெற்றுள்ள ஆத்தி.... பாடல் டீசர் வெளியிடப்பட்டது. இந்த டீசரை இதுவரை 13 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர். அடுத்து வெளியிடப்பட்ட செல்ஃபி புள்ள.. பாடல் டீசரை இதுவரை 13 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர்.
நேற்று மாலை 6 மணியளவில் வெளியிடப்பட்ட கத்தி டிரைலரை கடந்த சில மணி நேரங்களுக்குள்ளாகவே 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர். மொத்தத்தில் மூன்று நாட்களில் முப்பது லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்ட எண்ணிக்கையை கத்தி படத்தின் டீசர்களும், டிரைலர்களும் தொட்டிருக்கின்றன. இப்படி ஒரு சாதனையை ரஜினிகாந்தின் கோச்சடையான் படம் கூட தொடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு பெரிய நட்சத்திரங்களின் படம் வெளிவரும் போதும் தமிழ்த் திரைப்படங்கள் மக்களிடம் சென்று சேரும் விதத்தில் அடுத்த கட்டத்தை அடைந்து வருகின்றன.
இதையடுத்து ரஜினிகாந்த் நடித்து வெளிவர இருக்கும் லிங்கா படமும், அஜித் நடித்து வெளிவர இருக்கும் படமும் வேறு ஒரு சாதனையை புரியும் என்றும் எதிர்பார்க்கலாம்.