ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கத்தி படத்தின் வெளியீட்டுக்கு இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே முழுசாக உள்ளன. ஆனால் இன்னமும் கத்தி படத்தின் டிரைலர் இன்னும் வெளியாகவில்லை. விஜய் ரசிகர்கள் கத்தி படத்தின் டிரைலருக்காக தவியாய் தவித்துக் கொண்டிருக்கின்றனர். கத்தி படத்தின் டிரைலர் வராததை வைத்து இதுதான் சமயம் என்று, அஜித் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் விஜய்யையும், ஏ.ஆர்.முருகதாஸையும் செமத்தியாய் ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் கத்தி படத்தின் டிரைலருக்கு பதிலாக, நேற்றுமுன்தினம் கத்தி படத்தின் ஆத்தி... பாடல் டீஸர் வெளியிடப்பட்டது. நேற்று செல்ஃபிபுள்ள பாடல் டீஸர் வெளியிடப்பட்டது.
கத்தியின் அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் இப்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிடப்பட்டிருக்கிறது. பாடல் டீஸருக்கு கொடுத்த வரவேற்பிற்கு நன்றி! கத்தி டிரைலர் ரிலீஸ் தேதியை இன்னமும் முடிவு செய்யவில்லை. அதிகாரபூர்வமாக முடிவு செய்யப்பட்டதும் இந்த பக்கத்தில் நாங்களே அது குறித்து தெரிவிக்கிறோம். ரசிகர்களின் நீண்ட காத்திருப்பை நாங்கள் புரிந்து கொள்கிறோம்... படத்திற்கு நீங்கள் தொடர்ந்து தரும் ஆதரவுக்கு நன்றி. தவிர, கத்தி கேம் பற்றி நிறைய அப்டேட் செய்து வருகிறோம். 3டி கேம் பெற்ற வரவேற்பைத் தொடர்ந்து தற்போது 2டி கேமும் வெளியிடப்பட்டிருக்கிறது. ஐபோனுக்கான கேம் தற்போது உருவாகிக் கொண்டிருக்கிறது. என்ற அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கத்தி படத்தின் இடைவேளையில்தான் கத்தி படத்தின் டிரைலரை வெளியிடுவாங்க போலருக்கு!