ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
விஜயகாந்தின் அண்ணன் நாகராஜின் மகன் எம்.என்.ராஜசிம்மன், சினிமா தயாரிப்பாளராகியிருக்கிறார். மதர் பிக்சர்ஸ் என்ற தனது நிறுவனத்தின் சார்பில் அவர் தயாரிக்கும் படத்தின் பெயர் ஒரு காதல் ஒரு கல்யாணம். கணேஷ் என்ற புதுமுகம் ஹீரோவாகவும், ஜீவிகா, மயூரி என்ற புதுமுகங்கள் ஹீரோயினாகவும் அறிமுகமாகிறார்கள். ஹார்முக் ஒளிப்பதிவு செய்கிறார். அமர், சரண் இசை அமைக்கிறார்கள். மின்சாரம் படத்தை இயக்கிய என்.எஸ்.செல்வகுமாரன் இயக்குகிறார்.
"காதலிப்பவர்கள் எல்லாம் கல்யாணம் பண்ணிக் கொள்கிறார்களா? காதல் ஏன் கல்யாணம் வரை செல்ல மறுக்கிறது. அப்படியே சென்றாலும் அது ஏன் நிலைக்க மறுக்கிறது என்பதை உளவியல் ரீதியாக சொல்கிற படம். கன்னியாகுமரி, களியக்காவிளை, பொன்முடி, திருவனந்தபுரம் பகுதிகளில் படப்பிடிப்பு நட்தியுள்ளோம்" என்கிறார் இயக்குனர் செல்வகுமரன்.