மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? |
பூர்ணா சினிமாவுக்கு வந்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதுவரை 30 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்டார். தமிழில், ''முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு'' படத்தில் அறிமுகமானார். தமிழில் பத்து படங்கள் வரை நடித்திருந்தாலும் அவர் நடித்த படம் எதுவுமே பெருசாக போகவில்லை. இப்போது ஒரு பாட்டுக்கு ஆட வந்துவிட்டார். அலெக்ஸ் பாண்டியன் படத்துக்கு பிறகு சுராஜ் இயக்கும் படத்தில் ஜெயம்ரவி, த்ரிஷா, அஞ்சலி நடிக்கிறார்கள். நீண்ட இடைவெளிக்கு பிறகு லட்சுமி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறார்கள்.
இந்தப் படத்துக்கு அப்பாடக்கர் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இதில் கிளைமாக்சை ஒட்டி வரும் ஒரு பாடலுக்கு பூர்ணா ஆடுகிறார். தமன் இசை அமைப்பில் உருவாகியிருக்கும் குத்துப்பாட்டுக்கு பூர்ணா ஆடும் ஆட்டம் படத்துக்கு பலமாக இருக்குமாம். இதற்கான ஒத்திகையில் கடந்த சில நாட்களாக பூர்ணா ஈடுபட்டிருக்கிறார். சென்னையில் போடப்பட்டுள்ள பிரமாண்ட செட்டில் பாடல் காட்சியை எடுக்கிறார்கள்.
அப்பாடக்கரின் முதல் கட்ட படப்பிடிப்புகள் சென்னை செந்தில் ஸ்டூடியோவில் தொடங்கியது. இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் தென்காசி, குற்றாலம் பகுதிகளில் நடந்தது. அடுத்து கிளைமாக்ஸ படமாக்கப்பட இருக்கிறது.