மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
தனுஷின் இசைப்பயணத்தில் கொலவெறி பாடல் முக்கியத்துவம் வாய்ந்தது. அவரது மனைவி ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய 3 படத்தில்தான் அந்த பாடல் இடம்பெற்றிருந்தது. அனிருத் அந்த படத்தில்தான் அறிமுகமானார். அது மட்டுமின்றி அந்த ஒய் திஸ் கொலவெறி என்ற பாடலை தனுஷே எழுதி பாடியும் இருந்தார்.
அப்பாடல் வெளியான சில தினங்களிலேயே சூப்பர் ஹிட்டானது. இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் பிரபலமானது. பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன்கூட அந்த பாடலைக் கேட்டுவிட்டு தனுஷை பாராட்டியிருந்தார். ஆக, எத்தனையோ படங்களில நடித்திருந்தபோதும் அவர் பாடிய அந்த ஒருபாட்டு அவரை பெரிய அளவில் பிரபலப்படுத்தியது.
இந்த நிலையில், அந்த கொலவெறி பாடலைக்கேட்டதில் இருந்தே தனுசை தனது இசையில் பாட வைக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்த கன்னடபட இசையமைப்பாளர் அர்ஜூன் ஜன்யா. தற்போது தான் அதற்கான நேரம் கைகூடி வந்திருக்கிறதாம். அதனால் அதுபற்றி தனுஷிடம் அவர் சொன்னபோது, கண்டிப்பாக பாடித்தருகிறேன் என்று கூறியுள்ளாராம்.
கன்னடத்தில் சிவராஜ்குமார் நாயகனாக நடிக்கும் வஜ்ரகயா என்ற அந்த படத்திலும் கொலவெறி பாடல் போன்று ஒரு ஜாலியான பாடலையே பாடுகிறாராம் தனுஷ்.