ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கன்னடத்தில் வளர்ந்து வரும் நடிகை காவ்யா ஷெட்டி. தமிழில் இரண்டு படங்களில் அறிமுகமாகிறார். விஜய் விஷ்வகிரீஸ் இயக்கும் அவம் படத்தில் அறிமுகமாகிறார். ஏ.எல்.விஜய் இயக்கும் படத்தில் விக்ரம் பிரபு ஜோடியாக அறிமுகமாகிறார். இதுதவிர நட்டடு என்ற படத்தின் மூலம் தெலுங்கிலும் அறிமுகமாகிறார்.
"எனக்கு ஒரளவுக்கு தமிழ் தெரியும் என்பதால் சின்ன வயதிலிருந்தே தமிழ் படங்களை விரும்பி பார்ப்பேன். தமிழ் நடிகைகளைப் பார்த்துதான் சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆசையே வந்தது. இவ்வளவு சீக்கிரம் தமிழ் படத்தில் நடிப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை. அதுவும் இரண்டு படங்களில் நடிக்கிறேன்.
தமிழ் ரசிகர்களுக்கு என்னையும், என் நடிப்பபையும் பிடிக்கும் என்று நினைக்கிறேன். இரண்டு படங்களிலும் வித்தியாசமான இரண்டு கேரக்டர்கள். இரண்டும் எனக்கு நல்ல பெயரை பெற்றுத் தரும்" என்கிறார். காவ்யா ஷெட்டி.