ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
நடிகர் விஷால்தான் இப்போது சினிமாவை தாண்டி அதிகம் பேசப்படும் ஹீரோ. நடிகர் சங்கத்தின் முறைகேடுகளை தட்டிக் கேட்கிறார். நடிகர் சங்கத்துக்கு கட்டிட நிதி திரட்ட நடித்து தருவதாக சொல்கிறார். படத் தயாரிப்புக்கு பிரச்னை வந்தபோது சொந்த கம்பெனி ஆரம்பித்தார். பூஜை படத்தின் ஆடியோவை மட்டமான விலைக்கு கேட்டதால் சொந்தமாக ஆடியோ நிறுவனம் தொடங்கினார். புதுப்படத்தை ஒளிபரப்பிய உள்ளூர் சேனலின் அலுவலத்திற்கே சென்று அதிரடி நடவடிக்கை எடுக்கிறார். இப்போது அடுத்த கட்டமாக நாடக கலைஞர்களுக்கு ஆதரவு கரம் நீட்டியிருக்கிறார்.
ஹாட் ஷூ டான்ஸ் என்ற அமைப்பினர் சிக்காக்கோ என்ற இசை நாடகத்தை நடத்துகிறார்கள். நடனம் மற்றும் இசையோடு பிரமாண்ட லைட்டிங்கும், செட்டும் இந்த நாடகத்திற்கு அவசியம் இதற்கு நிறைய செலவாகும். அதனை ஏற்று அந்த நாடகத்தை விஷாலின் விஷால் பிலிம் பேக்டரி ஸ்பான்சர் செய்திருக்கிறது.
இந்த நாடகம் சேத்துப்பட்டில் உள்ள முக்தா வெங்கட சுப்பா ராவ் அரங்கில் நடந்தது. இதில் ஆர்யா, விஜய் சேதுபதி, பார்த்திபன், விஷ்ணு, விக்ராந்த், வரட்சுமி, நாசர், ராய் லட்சுமி, பவதாரிணி, வாசுகி பாஸ்கர், கிருத்திகா உதயநிதி, உள்பட பலர் வந்திருந்து பார்த்தனர்.
"சிறந்த நாடக கலைஞர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த சரியான களம் கிடைக்காமல் இருக்கிறார்கள். அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக இதனை செய்திருக்கிறேன். இந்த இசை நாடகம் ஐதராபாத், பெங்களூர் உள்ளிட் பிற நகரங்களிலும் நடத்தப்பட இருக்கிறது" என்கிறார் விஷால்.