Advertisement

சிறப்புச்செய்திகள்

விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'பாகுபலி' படப்பிடிப்பில் தீ விபத்து!

14 அக், 2014 - 12:37 IST
எழுத்தின் அளவு:

'நான் ஈ' படத்தின் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி தற்போது பிரம்மாண்டமாக இயக்கி வரும் சரித்திரப் படம் 'பாகுபலி'. இப்படம் தமிழில் 'மகாபலி' என்ற பெயரிலும் படமாக்கப்பட்டு வருகிறது. பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.


இப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன் ஹைதராபாத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான அரங்கில் படமாக்கப்பட்டு வந்தது. அப்போது குண்டு வெடிப்பு காட்சி ஒன்று படமாக்கப்பட்டதாம். அந்த சமயத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் நால்வர் காயமடைந்துள்ளனர். அவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பபட்டுள்ளனர்.


தெலுங்குத் திரையுலகம் மட்டுமல்லாது இந்தியத் திரையுலகமே 'பாகுபலி' படத்தை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறது. கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக நடைபெற்று வரும் படப்பிடிப்பில் இப்படி எந்த ஒரு பிரச்னையும் ஏற்பட்டதில்லை. முதன் முறையாக ஒரு விபத்து ஏற்பட்டது படக் குழுவினரைக் கொஞ்சம் பாதித்துள்ளதாம். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்து ஆண்டு துவக்கம் வரை நடைபெற உள்ளது. படப்பிடிப்பு நடக்கும் போதே பிற தொழில்நுட்ப வேலைகளும் நடந்து வருகிறது. கோடை விடுமுறையிலோ அதற்குப் பிறகோ படம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தெலுங்குத் திரையுலகில் இதுவரை யாருமே செலவு செய்யாத அளவிற்கு பல கோடி ரூபாய் செலவில் இப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது. பொதுவாக சண்டைக் காட்சிகள் என்றாலே விபத்துக்கள் நடப்பது சகஜம்தான். இந்தப் படத்தில் எண்ணற்ற துணை நடிகர்களுடன், சண்டைக் கலைஞர்களுடன் பல நாட்கள் படப்பிடிப்பு நடந்திருந்தாலும், சமீபத்திய விபத்து எதிர்பாராமல் நடந்ததாகவே படப்பிடிப்புக் குழுவினர் தெரிவித்துள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in