மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி? | அகண்டா 2 தேதி குறிப்பிடாமல் தள்ளி வைப்பு… | ஒரு சாராருக்கு பிடித்த படங்களே வருகின்றன : இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் | லாக் டவுனை புறக்கணிக்கிறாரா அனுபமா பரமேஸ்வரன்? | மகேஷ்பாபு ரவீணா டாண்டன் குடும்பத்தினரின் குறுக்கீடு எதுவும் இல்லை ; இயக்குனர் அஜய் பூபதி | ஹீரோ ஆனார் ராம்கோபால் வர்மா | தர்மேந்திரா பிறந்தநாளில் ரசிகர்களின் பார்வைக்காக பண்ணை வீடு திறப்பு | தாயின் கருவில் இருந்தபோதே கேட்ட ஸ்லோகம் அது : பாலகிருஷ்ணா தகவல் | கேரளாவில் பம்பாய் பட 30ம் ஆண்டு கொண்டாட்டம் : மணிரத்னம் கலந்து கொள்கிறார் | சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு |
ஒரே சமயத்தில் கமல்ஹாசன் மூன்று படங்களில் நடித்து முடிக்கப் போகிறார். 'விஸ்வரூபம் 2' படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய முழுவதுமாக முடிந்து விட்ட நிலையில் இன்னும் ஒரு சில காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட வேண்டுமாம். சில மாதங்களுக்கு முன்பே இப்படம் முடிவடைந்து வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தயாரிப்பாளருக்கும் கமல்ஹாசனுக்கும் இடையே பிரச்சனை எழுந்ததால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது.
கமல்ஹாசனும் 'உத்தம வில்லன்' படத்தில் நடிக்கப் போய்விட்டார். இப்போது அந்தப் படத்தின் படப்பிடிப்பும் முடிவடைந்து படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இப்படம் கமல்ஹாசன் பிறந்த நாளான நவம்பர் 7ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், இன்னும் இசை வெளியீடு, டீஸர் வெளியீடு என எதுவுமே நடைபெறாத நிலையிலும், நவம்பரில் 'ஐ' படம் வெளியாக உள்ளதாலும் 'உத்தம வில்லன்' படத்தின் வெளியீடு தள்ளிப் போக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. டிசம்பரில் ரஜினிகாந்த் நடித்துள்ள 'லிங்கா' வெளிவர உள்ளதால் 'உத்தம வில்லன்' படத்தை ஒருவழியாக பொங்கலுக்கு வெளியிடலாமா என யோசித்து வருகிறார்களாம். அதோடு கமல்ஹாசன் மூன்றாவதாக தற்போது மலையாள ரீமேக்கான 'பாபநாசம்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பும் இன்னும் ஒரு சில வாரங்களில் முடிந்து விடுமாம். ஒரே வருடத்தில் கமல்ஹாசன் நடித்து அடுத்தடுத்து மூன்று படங்களின் படப்பிடிப்பு நடைபெற்றது இதுவே முதல் முறை என்கிறார்கள். ஆனால், இந்த மூன்று படங்களும் இந்த ஆண்டிலேயே வெளிவர வாய்ப்பிருக்குமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
'விஸ்வரூபம் 2, பாபாநாசம்' படங்கள் கண்டிப்பாக அடுத்த வருடம்தான் வெளிவரும் என்பதை உறுதியாகச் சொல்லலாம். ஆனால், கமல்ஹாசன் ரசிகர்கள் 'உத்தம வில்லன்' படத்தை இந்த ஆண்டே வெளியானால் நன்றாக இருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள்.
ரசிகர்களின் ஆவலை கமல்ஹாசன் நிறைவேற்றுவாரா.....?




