ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ், தெலுங்கின் முன்னணி நடிகையான த்ரிஷாவைப் பொதுவாக அனைத்து நடிகைகளுமே பாராட்டுகிறார்கள். போட்டியாளர்களுடனும் நட்பு பாராட்டுவதில் த்ரிஷா முதலிடத்தில் இருக்கிறாராம். அவருடன் சேர்ந்து பணியாற்றும் சந்தர்ப்பம் கிடைத்த நடிகைகள், பழகியவர்கள் அவரை வாயாராப் புகழ்ந்து தள்ளுகிறார்கள். சமீபத்தில் த்ரிஷாவைப் புகழ்ந்து பேசியவர்களில் நடிகை நிகிஷா பட்டேல் சேர்ந்திருக்கிறார். த்ரிஷாவும், நிகிஷாவும் தெலுங்கில் 'ரம்' என்ற படத்தில் இணைந்து நடித்தவர்கள். அந்தப் படம் அதன் பின் சில காரணங்களுக்காக அப்படியே கிடப்பில் போடப்பட்டு விட்டது.
சமீபத்தில் நிகிஷா, த்ரிஷாவைப் பற்றி மனதாராப் பாராட்டிப் பேசியிருக்கிறார். “எந்த கோணத்தில் பார்த்தாலும் த்ரிஷா மிகவும் அழகாக இருக்கிறார். அவர் மிகவும் அழகானவர், அக்கறையானவர், நட்பாகப் பழகுபவர். மற்ற நடிகைகளுக்கு உதவி செய்வதிலும், ஆலோசனை கொடுப்பதிலும் த்ரிஷா மிகவும் உயர்ந்த இடத்தில் இருக்கிறார். அவருடன் 'ரம்' படத்தில் நடித்த போது வெறும் ஆலோசனைகளை மட்டும் சொல்ல மாட்டார், நம்மை அப்படியே 'மோல்ட்' செய்து விடுவார். த்ரிஷாவின் ஆலோசனைகளைக் கேட்ட பின், என்னுடைய திறமையிலும் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது,” என்று தெரிவித்துள்ளார்.
இப்போது தெரிகிறதா த்ரிஷா ஏன் பத்து ஆண்டுகளுக்கு மேலாகியும் இந்த போட்டி நிறைந்த சினிமா உலகத்தில் தாக்குப் பிடித்திருக்கிறார் என்று...?