மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
ஹாட் அண்ட் செக்ஸி நடிகையான கத்ரீனா கைப் சிறந்த நடிகை மட்டுமல்ல, சிறந்த டான்சரும் கூட. அதற்கு, அவரின் ''ஷீலா கி ஜவானி'', ''சிக்கினி சமலி'', ''கமலி'' போன்றவைகள் உதாரணம். ஹாலிவுட் படமான ''ஸ்டெப் அப்'' படம் ஒன்று கதை வந்தால் கண்டிப்பாக அதில் நடிப்பேன் என்கிறார் கத்ரீனா.
இதுகுறித்து கத்ரீனா கைப் கூறியுள்ளதாவது, டான்ஸ் என்றால் எனக்கு உயிர், அதில் அதிக ஆர்வம் உடையவள் நான். அதனால் நடனத்தை மையப்படுத்தி கதைகள் வந்தால் கண்டிப்பாக நான் நடிப்பேன் என்கிறார். சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியாகியுள்ள பேங் பேங் படம் சூப்பர் ஹிட்டாகியுள்ளதால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார் கத்ரீனா. அதேசமயம் அவரது நடிப்பை ரசிகர்களை கவரவில்லை என்ற ஒரு பேச்சும் அடிபடுகிறது.
இதுப்பற்றி கத்ரீனாவை கேட்டால், அதைப்பற்றி எனக்கு கவலையில்லை என்று சொல்கிறவர், கூடவே தத்துவமும் பேசுகிறார். அதாவது, நான் ''வாழுங்கள், வாழ விடுங்கள்...' என்ற கொள்கையை உடையவள். எனது படம் ரசிகர்களுக்கு பிடித்து இருந்தால் அவர்கள் தியேட்டருக்கு போய் படத்தை பார்த்து ரசிக்கட்டும், பிடிக்கவில்லை என்றால் படத்தை பார்க்க வேண்டாம், நான் யாரையும் கட்டாயப்படுத்தி படத்தை பார்க்க சொல்லவில்லை என்கிறார்.