ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பர்பி இந்தி படத்தில் என்ட்ரி கொடுத்த இலியானா, அதையடுத்து படா போஸ்டர் நிக்லா ஹீரோ, மெயின் தேரே ஹீரோ ஆகிய படங்களில் நடித்தவர் இப்போது ஹேப்பி என்டிங் என்ற படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். தனது படங்களில் செக்ஸியான போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்து வரும் இலியானா, சமீபத்தில் செக்ஸ் பற்றி ஒரு கருத்து பரிமாறியிருந்தார்.
அதில், செக்ஸ் நம்முடைய உடல்கட்டை நல்ல ஷேப்பில் அழகுடன் வைத்திருக்க உதவுகிறது. இது தேவையான ஒரு விசயம்தான் என்று கமெண்ட் கொடுத்திருந்தார்.இந்த தகவல் மீடியாக்களில் வெளியானதையடுத்து, பரபரப்பின் உச்சத்தில் இருக்கிறார் இலியானா. முன்பு ஒருமுறை என்னுடைய 16 வயதில், எனது தந்தையிடமே நான் செக்ஸ் பற்றி விவாதித்திருக்கிறேன் என்றும் இலியானா கூறியிருந்தார். அவரது இந்த துணிச்சலான கருத்துக்களால் தற்போது இந்தியாவிலுள்ள பெருவாரியான இளைஞர்களின் உதடுகளில் உச்சரிக்கப்படும் பெயராக இலியானா மாறியிருக்கிறார்.
இந்த நிலையில், சில வில்லங்கமான ரசிகர்கள், இலியானாவின் சமூக வலைதளத்திற்குள் சென்று, செக்ஸ் பற்றிய தங்களது சநதேகங்களை இலியானாவின் கவனத்துக்கு கொண்டு செல்கிறார்களாம். இன்னும் சிலர், தங்களது போட்டோக்களை அனுப்பி இந்த உடம்பு செக்ஸியாக உள்ளதா? இதற்கு எத்தனை மதிப்பெண் கொடுப்பீர்கள்? என்றெல்லாம் கேட்டு அவரை இம்சித்து வருகிறார்களாம். இதனால் இப்படியொரு கருத்தை ஏன் வெளிப்படையாக சொன்னோம் என்று தற்போது வருந்திக்கொண்டிருக்கிறாராம் இலியானா.