ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஹிருத்திக் ரோஷன், கத்ரினா கைஃப் நடித்து சமீபத்தில் வெளிவந்த பேங் பேங் படம் 2014ம் ஆண்டு வெளிவந்த படங்களின் ஓப்பனிங் வசூல் சாதனைகளை முறியடித்து வருகிறது. வெளிவந்த 4 நாட்களுக்குள் 201 கோடியே 51 லட்சம் வசூலித்து 200 கோடி கிளப்பில் எளிதாக இணைந்தது. ஹிருத்திக்கின் படங்களிலேயே இதுதான் உச்சபட்ச வசூல் சாதனை. கேத்ரினா கைஃப்புக்கு இது ஹாட்ரிக் வசூல் படம். இதற்கு முந்தைய அவரது படங்களான தூம் 3, ஏக்தா டைகரை தொடர்ந்து இதுவும் 200 கோடி கிளப்பில் இணைந்திருக்கிறது.
இந்தியாவில் மட்டுமல்ல பாகிஸ்தான் உள்ளிட்ட உலக நாடுகளிலும் வசூலில் சாதனை படைத்து வருகிறது. சுமார் 200 கோடி செலவில் உருவாக்கப்பட்ட இந்தப் படம் மொத்தம் 500 கோடி வரை அள்ளும் என்கிறார்கள். ஹிருத்திக் ரோஷனின் சூப்பர் ஆக்ஷன், கேத்ரினை கைஃப் மற்றும் ஹிருத்திக்கின் நடனம், சூப்பர் ஸ்கிரிப்ட் இவற்றால் படத்தை நோக்கி ரசிகர்கள் படையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.