Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

பாலிவுட்டில் அதிகரிக்கும் ரீ-மேக் படங்கள் - ஸ்பெஷல் ஸ்டோரி!

06 அக், 2014 - 22:38 IST
எழுத்தின் அளவு:

சமீபகாலமாக, தமிழ் சினிமாவில் மட்டுமின்றி, தெலுங்கு, இந்தி போன்ற மற்ற சினிமாக்களிலும் ரீ-மேக் படங்கள் அதிகமாக வெளிவருகின்றன. அதிலும் குறிப்பாக இந்தி சினிமாவில் இந்த மோகம் அதிகரித்துள்ளது. ஒரு ரீமேக் படம் ஹிட்டாகிவிட்டால், தொடர்ந்து அதுபோன்ற படங்கள் வெளிவர தொடங்கிவிட்டன. அந்த வகையில் சமீபத்தில் வெளியான கூப்சூரத் படம் முதல் ஏற்கனவே வெளிவந்த ரீ-மேக் படங்கள் பற்றிய ஸ்பெஷல் ரிப்போர்ட் இது, இதில் எந்தெந்த படங்கள் ஹிட் படங்களாக அமைந்தன, எந்த படங்கள் தோல்வியை சந்தித்தன, என்பதை பற்றி இனி பார்ப்போம்...

கூப்சூரத்

ராகேஷ் ரோஷன், ரேகா நடிப்பில் 1980களில் வெளிவந்த கூப்சூரத் படத்தை தான், சமீபத்தில் பவாத் கான், சோனம் கபூர் நடிப்பில் அதேபெயரில் கூப்சூரத் என ரீ-மேக் செய்தனர். சஷான்கோ கோஷ் இயக்கி இருந்தார். முந்தைய கூப்சூரத்தை படத்தோடு ஒப்பிடும்போது, இப்போது வந்த கூப்சூரத் படம் பெரிதாக போகவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

ஷாக்கீன்ஸ்

கூப்சூரத்தை தொடர்ந்து அடுத்து வெளிவர இருக்கும் படம் ஷாக்கீன்ஸ். 1982-ல் பாசு சாட்டர்ஜி இயக்கத்தில், அசோக் கும்மூத், ஏகே.ஹங்கால், ரதி, மிதுன் சக்கவர்த்தி ஆகியோரது நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான ஷாக்கீன்ஸ் படத்தை தான் தற்போது அதே பெயரில் ரீ-மேக் செய்துள்ளனர். அனுபம் கெர், அன்னு கபூர், பியூஸ் மிஸ்ரா, லிசா ஆகியோர் நடித்துள்ளனர், அபிஷேக் சர்மா இயக்கியுள்ளார். இப்படம் விரைவில் வெளிவர இருக்கிறது, இந்தப்படத்திற்கு எந்தமாதிரி ரிசல்ட் கிடைக்கும் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

சாஷ்மே பாதூர்


கடந்தாண்டு வெளிவந்த படம் சாஷ்மே பாதூர். 1981ம் ஆண்டு வெளிவந்த சாஷ்மே பாதூரைத்தான் அதேபெயரில் ரீ-மேக் செய்தனர். அலி ஜாபர், சித்தார்த், திவேந்து சர்மா ஆகியோர் நடித்திருந்தனர். மூன்று நண்பர்களை சுற்றி இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டு இருந்தது. முந்தைய சாஷ்மே பாதூருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது, ஆனால் ரீ-மேக், சாஷ்மே பாதூர்-க்கு பெரிய வெற்றி கிடைக்கவில்லை.

ஹிம்மாத்வாலா

1983ம் ஆண்டு ஜிந்தேந்திரா, ஸ்ரீதேவி நடிப்பில் வெளியாகி சூப்பர்-டூப்பர் ஹிட்டான படம் ஹிம்மாத்வாலா. இதேபடத்தை அஜய் தேவ்கன், தமன்னா ஆகியோரை வைத்து ரீ-மேக் செய்தனர், பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்படம் படுதோல்வியை சந்தித்தது.

அக்னிபத்

2012-ம் ஆண்டு ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் வெளிவந்த படம் அக்னிபத். அந்தாண்டு வெளிவந்த படங்களில் சூப்பர்-டூப்பர் ஹிட்டான படங்களில் அக்னிபத்தும் ஒன்று. 1990ம் ஆண்டு அமிதாப்பச்சன் நடிப்பில் வெளிவந்த அக்னிபத்தை தான், அதே பெயரில் ரீ-மேக் செய்தனர். இரண்டுமே சூப்பர் ஹிட்டானது.

டான்

அதே அமிதாப் பச்சன் நடிப்பில் 1978-ம் ஆண்டு வெளிவந்த படம் டான். அமிதாப் இரட்டை வேடங்களில் நடித்து இருந்தார். இப்படம் சூப்பர் ஹிட்டானது. பின்னர் அதேபெயரில், ஷாரூக்கான்-ப்ரியங்கா சோப்ரா நடிப்பில் டான் படம் ரீ-மேக் ஆனது. ஷாரூக்கானும் இரண்டு வேடங்களில் நடித்து இருந்தார். முந்தைய டானைப்போலவே ரீ-மேக் டானும் சூப்பர் ஹிட்டானது. சொல்லப்போனால், டான், அக்னிபத் போன்ற படங்களின் ஹிட்டை பார்த்து தான் -பாலிவுட்டில் ரீ-மேக் ஆர்வம் இன்னும் அதிகரித்தது.

தேவதாஸ்

டான், அக்னிபத் படங்களை போன்று ஷாரூக்கான் நடிப்பில் வெளியாகி மற்றொரு சூப்பர் ஹிட்டை சந்தித்த ரீ-மேக் படம் தேவதாஸ். 1955-ல் திலீப் குமார், வைஜெயந்தி மாலா, சுஜித்ரா சென் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான தேவதாஸ் படத்தை தான் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி, ஷாரூக்கான், ஐஸ்வர்யா ராய், மாதுரி தீட்சித் ஆகியோரை வைத்து தேவதாஸ் என்ற அதேபெயரில் ரீ-மேக் செய்தார். இப்படமும் சூப்பர் ஹிட்ட படமாக அமைந்தது.

மேற்சொன்னபடி சில ரீ-மேக் படங்கள் சூப்பர் ஹிட்டாகியுள்ளன, பல படங்கள் தோல்வியை சந்தித்து உள்ளன. இதன்மூலம் நாம் அறிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், என்னதான் பழைய படங்களை ரீ-மேக் செய்தாலும், அதை இந்தக்காலத்து ரசிகர்களுக்கு ஏற்றபடியும் இயக்குநர் இயக்க தெரிந்து இருக்க வேண்டும். மேலும் நடிகர்களும் அதற்கு ஏற்றாற்போல் தங்களது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்த வேண்டும், அப்படி செய்தால் மட்டுமே படம் ஹிட்டாகும், இல்லையேல் அந்தப்படம் தான் தோல்விப்படமாகத்தான் அமையும்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in