ஹீரோ ஆனார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | ‛சக்தி திருமகன்' முதல் ‛ஓஜி' வரை : இந்த வார ஓடிடி ஸ்பெஷல்....! | 'பைசன்' படத்தை பாராட்டிய பா.ஜ.,வின் முன்னாள் தலைவர் அண்ணாமலை! | ஹாட்ரிக் ரூ.100 கோடி வசூலை தந்த பிரதீப் ரங்கநாதன் | அக்டோபர் 31ல் நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் தனுஷின் இட்லி கடை! | 5 நிமிட நடனத்திற்கு ஐந்து கோடி சம்பளம் வாங்கும் பூஜா ஹெக்டே! | கருத்த மச்சான் பாடலுக்கு மமிதா பைஜூ அசத்தல் நடனம் ! வைரலாகும் வீடியோ!! | கிண்டல் செய்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த சூரி | 'பராசக்தி' பாடல்கள் விரைவில்… ஜிவி பிரகாஷ் தகவல் | கதை நாயகியான கீதா கைலாசம் |
நடிகர் சிவாஜி கணேசன் நடித்த கர்ணன், வசந்த மாளிகை, திருவிளையாடல் போன்ற படங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு மீண்டும் வெளியிடப்பட்டது. அந்த வரிசையில் 1973ம் ஆண்டு வெளிவந்த ராஜபார்ட் ரங்கத்துரை படமும் டிஜிட்டல் படுத்தப்பட்டு வருகிறது.
வி.சி-.குகநாதன் தயாரித்த இந்தப் படத்தை பி.மாதவன் இயக்கி இருந்தார். சிவாஜியுடன் உஷா நந்தினி, நம்பியார், வி.கே.ராமசாமி, மனோரமா, டி.கே.பகவதி நடித்திருந்தனர். எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்திருந்தார்.
இந்தப் படம் அப்போது பெரும் வெற்றி பெற்றதுடன் பாடல்கள் பெரிய அளவில் ஹிட்டானது. சிவாஜி கோமாளி வேஷமிட்டு பாடி ஆடும் "ஜிங்கினிக்கா சின்ன கிளி சிரிக்கும் பச்சைக்கிளி ஓடிவந்தா மேடையிலே ஆட்டமாட..." பாடலை இப்போது பார்த்தாலும், கேட்டாலும் கண்ணீர் வரும்.
இப்போது ராஜபார்ட் ரங்கத்துரையை அபி சினி ஆர்ட்ஸ் என்ற நிறுவனத்தார் டிஜிட்டலில் மெருகூட்டி வருகிறார்கள். நவம்பர் மாதம் ரிலீசாகும் என்று தெரிகிறது.