ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தற்போது ஏறக்குறைய பல நட்சத்திரங்கள் சமூக வலைத்தளங்களில் பரபரப்பாகவே இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் இன்றைய இளம் ஹீரோயின்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் அவரவர்க்கென ஒரு கணக்கை வைத்துக் கொண்டுதானிருக்கிறார்கள். ரசிகர்களிடம் அவர்களுக்கு நேரடித் தொடர்பை அவை ஏற்படுத்திக் கொடுக்கின்றன. அதே சமயம் சில அசௌகரியங்களையும் கொடுக்கின்றன. ஒரு பக்கம் பாராட்டித் தள்ளும் ரசிகர்கள் மறுபக்கம் திட்டவும் தயங்குவதில்லையாம். அப்படித்தான் ஹன்சிகா ஒரு மலையாளப் படத்தில் நடிக்கப் போகிறார் என்று சில செய்திகள் வெளியாகியுள்ளன. ஆஹா, ஹன்சிகா மலையாளத்தில் நடிக்க வருகிறாரே என்று ரசிகர்கள் பாராட்டித் தள்ளினார்களாம்.
ஆனால், அந்த செய்தியில் எந்த உண்மையும் இல்லை என ஹன்சிகா பதிலளித்திருக்கிறார். அது ரசிகர்களை கோபமடைய வைத்துவிட்டதாம். ஆங்கிலம், ஹிந்தி மட்டுமே தெரிந்த ஹன்சிகாவின் வலைத்தளத்தில் பல ரசிகர்கள் மலையாளம் முதல் கொண்டு கமெண்ட் அடித்து திட்டினார்களாம். இதனால் ஹன்சிகா மிகவும் வருத்தப்பட்டாராம். இருந்தாலும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் ரசிகர்கள் என்றால் அப்படித்தான் இருப்பார்கள் என அதை எளிதாக எடுத்துக் கொண்டுள்ளாராம். சரி, மலையாள ரசிகர்களுக்கும் கோபாம் வராமல் என்ன செய்வார்கள். ஹிந்தியிலிருந்து வரும் நடிகைகள் தெலுங்கிலும், தமிழிலும் மட்டுமே நடித்து விட்டுப் போனால் அவர்கள் பொறமைப்பட மாட்டார்களா.. ஆண்டாண்டு காலமாக இப்படித்தானே நடந்து வருகிறது. ஹிந்தி ஹீரோயின்களுக்கு கொடுக்கும் சம்பளத்தில் மலையாளத்தில் ஒரு படத்தையே எடுத்து முடித்துவிடுவார்களே...