ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
ஹ்ருத்திக் ரோஷன், காத்ரினா கைஃப் நடிப்பில் வெளி வந்திருக்கும் பேங் பேங் ஹிந்திப் படம் வசூலில் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தி இருக்கிறது. முதல் நாள் வசூலில் தூம் 3, சென்னை எக்ஸ்பிரஸ், ஏக் தா டைகர், சிங்கம் ரிட்டர்ன்ஸ் ஆகிய ஹிந்தி படங்கள் சாதனை படைத்த படங்களாக உள்ளன. இந்தப்படங்களின் வரிசையில் பேங் பேங் படமும் இடம் பிடித்திருக்கிறது. ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்திருக்கும் பேங் பேங் திரைப்படம் ஒரே நாளில் கிட்டத்தட்ட 27 கோடியே 50 லட்சம் ரூபாய் வசூல் செய்திருக்கிறதாம்.
பேங் பேங் படத்துக்கு இன்னொரு பெருமையும் கிடைத்திருக்கிறது. ஹ்ருத்திக் ரோஷன் நடிப்பில் வெளிவந்த படங்களில் முதல் நாளில் மிகப்பெரிய வசூல் செய்திருப்பதும் இந்த பேங் பேங் படம்தான். பாலிவுட் படத்தின் நிலவரம் இப்படி இருக்க, பேங் பேங் படம் வெளியான அதே தினத்தில் கோலிவுட்டில் வெளியான யான் படத்தின் வசூல் நிலவரம் என்ன?
யான் படத்தின் இயக்குநர் ரவி கே.சந்திரன் பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணிபுரிந்திருக்கிறார். எனவே கே.வி.ஆனந்த் போலவே இவரும் வெற்றிப்படம் கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. யான் படம் அதை பொய்யாக்கிவிட்டது. யான் படத்தைப் பார்த்தவர்களின் விமர்சனங்கள் அப்படத்திற்கு எதிராகவே அமைந்தன. எந்த தரப்பு ரசிகர்களிடமிருந்தும் பாசிட்டிவ் டாக் வரவில்லை, ஆனாலும் யான் படத்தின் முதல் நாள் வசூலை அது எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை என்கிறது தயாரிப்பாளர் தரப்பு. இப்படம் முதல் நாளில் மட்டும் கிட்டத்தட்ட 2 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறதாம். ஐந்து நாட்கள் ஹவுஸ்ஃபுல் ஆனால் போதும், நான் போட்ட பணத்தை எடுத்துவிடுவேன் என்கிறாராம் தயாரிப்பாளர்.