ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஹேப்பி நியூ இயர் படத்திற்காக ஷாருக்கான் தனியாக போஸ் கொடுத்துள்ள புதிய போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டரில் 8 பேக்ஸ் உடன் காட்சி தரும் புதிய ஷாருக்கான் உள்ளார்.
இதற்கு முன் வெளியிடப்பட்ட ஹேப்பி நியூர் போஸ்டர்களில் கலர்புல்லாகவும், கூலாகவும் போஸ் கொடுத்துள்ள ஷாருக்கான், இதில் இருட்டு அறையில் ஷாருக்கான் மீது மட்டும் ஒளி பரவுவது போன்று காட்சியளிக்கிறார். ஷாருக்கான் 8 பேக்ஸ் உடன் வரும் இந்த போஸ்டரை பிரம்மாண்டமாக காட்டுவதற்காக இது போன்று படமாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
படத்தின் பிரம்மாண்டம் மற்றும் ஆக்ஷன் அதிரடியை மறைமுகமாக கூறுவதற்காக இந்த போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தீபாவளிக்கு ரிலீசாக இருக்கும் அந்த இப்படம் பற்றிய எதிர்பார்ப்பை இந்த போஸ்டர் அதிகப்படுத்தி உள்ளது. ஹேப்பி நியூ இயர் படம் கலர்புல்லான, ஆக்ஷன் கலந்த, இசை விருந்தாக அமைய உள்ளதாம்.
இப்படத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோனே, அபிஷேக் பச்சன், பூமன் இரானி, சோனு சூன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஃபரக் கான் இயக்கி உள்ள இந்த படத்தை ரெட் சில்லீஸ் என்டர்டைன்மன்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. ஹேப்பி நியூ இயர் படம் தீபாவளிக்காக அக்டோபர் 24ம் தேதி இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் ரிலீசாக உள்ளது.