ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
பேங் பேங் படத்தை பிரமோட் செய்வதற்காக தான் நடத்தும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருமாறு ஹிருத்திக் ரோஷனுக்கும், கத்ரினா கைப்பிற்கும் சல்மான் கான் அழைப்பு விடுத்து வந்தார். ஆனால், பேங் பேங் படத்திற்கு அந்த படக்குழுவினர் பெரிய அளவில் பிரமோஷன் ஏதும் செய்யவில்லை.
இருந்தாலும், கத்ரினா நடித்த தூம் 3 படத்திற்கு வாழ்த்து கூறியதை போன்று பேங் பேங் படத்தையும் வாழ்த்தி உள்ளார். பேங் பேங் படம் பற்றியும் அதில் கத்ரினாவின் நடிப்பு பற்றியும் தனது நண்பர்கள் மற்றும் படஅதிபர்கள் சிலரிடம் பேசி வருகிறாராம் சல்மான்.
ஜாக்லின் பெர்னாண்டசுடன் கிசுகிசுக்கப்பட்டு வரும் சல்மான் கான், கத்ரினாவின் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் அவரது தொழிலுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளது புதிய வசந்திகளை பாலிவுட்டில் பரப்பி விட்டுள்ளது. சல்மானின் இந்த வாழ்த்து கத்ரினாவை மிகவும் கவர்ந்து விட்டதாம்.
சல்மானின் வாழ்த்து பற்றி கருத்து தெரிவித்துள்ள கத்ரினா, இந்த படம் வெளிவருவதற்கு முன்பு ஆரம்பத்திலேயே இப்படத்தை புகழடைய வைத்தவர் சல்மான் தான் என கூறி உள்ளார். இந்த வாழ்த்து பரிமாற்றங்களையும், வதந்திகளையும் கத்ரினாவின் காதலரான ரன்பீர் பெரிய அளவில் கண்டுகொள்ளவில்லையாம்.