Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

முத்த காட்சியில் நடித்துவிட்டு கதறி அழுத நடிகை

20 ஜூன், 2010 - 00:00 IST
எழுத்தின் அளவு:

பொள்ளாச்சி அருகே நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து, ஆறாவது வனம் என்ற படம் தயாராகி வருகிறது. படத்தின் கதைப்படி, ஒரு கிராமத்தில் ஒரே ஒரு மனிதர் மட்டும் வசித்து வருகிறார். அந்த கிராமம் அப்படி வெறிச்சோடி கிடப்பதற்கு காரணம் என்ன? என்பதே இந்த படத்தின் கரு. இதில் புதுமுகங்கள் பூஷண் -வித்யா நாயகன் - நாயகியாக நடிக்கிறார்கள். கே.பாக்யராஜின் உதவியாளர் புவனேஷ் இயக்குகிறார். எஸ்.எம்.தியாகராஜன் தயாரிக்கிறார்.

கதைப்படி, நாயகனும், நாயகியும் வேறு வேறு ஜாதியை சேர்ந்தவர்கள். இவர்களின் காதல் விவகாரம் தெரிந்ததும், 2 சாதியை சேர்ந்தவர்களும் ஒருவரையொருவர் வெட்டி சாய்க்க துடிக்கிறார்கள். கதாநாயகன் பூஷண், கதாநாயகியின் தாய்மாமனை வெட்டி சாய்ப்பதற்கு அரிவாளுடன் பாய்ந்து வருகிறான். அதைப்பார்த்த கதாநாயகி வித்யா, தாய் மாமனையும் காப்பாற்ற வேண்டும்....காதலனையும் கொலைப்பழியில் இருந்து காப்பாற்ற வேண்டும்... அதற்கு என்ன செய்யலாம்? என்று யோசிக்கிறார். கதாநாயகனின் மனதை மாற்றுகிற மாதிரி ஏதாவது செய்ய வேண்டும் என்ற முடிவுக்கு வருகிறாள். உடனே, அரிவாளுடன் பாய்ந்து வரும் கதாநாயகன் பூஷணை கட்டிப்பிடித்து, உதட்டுடன் உதடு சேர்த்து முத்தம் கொடுக்கிறார்.

இந்த காட்சியை படமாக்க இயக்குனர் புவனேஷ் திட்டமிட்டார். முத்தம் கொடுப்பது பற்றி நாயகியிடர், டைரக்டர் விளக்கினார். முதலில் உதட்டோடு உதடு பதித்து முத்தம் கொடுக்கத் தயங்கிய அறிமுக நாயகி வித்யா, பின்னர் ஒப்புக் கொண்டார். பொள்ளாச்சி அருகில் உள்ள மலைப்பகுதியில் பொதுமக்கள் 2 ஆயிரம் பேர்களுக்கு மத்தியில், அந்த முத்த காட்சி படமாக்கப்பட்டது. நடித்து முடித்ததும், வித்யா முகத்தை மூடிக்கொண்டு கதறி அழுதார். அழுதபடியே அவர் தங்கியிருந்த ஓட்டலுக்கு போய் விட்டார். அங்கு போனபிறகும் அவர் அழுகையை நிறுத்தவில்லை. டைரக்டர் புவனேஷ் ஓட்டலுக்கு சென்று வித்யாவை சமாதானப்படுத்தி, படமாக்கப்பட்ட காட்சியை `மானிட்டரில்' திரையிட்டு காண்பித்தார். விரசம் இல்லாமல் அந்த முத்த காட்சி படமாக்கப்பட்டு இருந்ததால், வித்யா சமாதானம் ஆனார். இந்த சம்பவத்தால் பொள்ளாச்சி மலைப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.

Advertisement
மீண்டும் பெயரை மாற்றினார் விஜய டி.ராஜேந்தர்மீண்டும் பெயரை மாற்றினார் விஜய ... அங்காடித்தெரு மகேஷ் நடிக்கும் புதிய படம்! அங்காடித்தெரு மகேஷ் நடிக்கும் புதிய ...


வாசகர் கருத்து (40)

lali - t-nagar,இந்தியா
19 மார், 2012 - 00:44 Report Abuse
 lali அவர் எந்த சிக்கலிலோ நடிக்க வந்து விட்டார் ..... எது எப்படியோ ஒருவர் கஷ்டப்படும் போது அதை இவ்வளவு கேவலமாக விமர்சிக்க வேண்டாம்...
Rate this:
saran - chennai,இந்தியா
02 ஜூலை, 2011 - 13:56 Report Abuse
 saran ஹலோ நடிக்க வந்துட்டாலே அவ்வளவுதான்
Rate this:
asha - comibatore,இந்தியா
02 ஜூலை, 2011 - 11:52 Report Abuse
 asha ப்ளீஸ் டோன்ட் கமென்ட் ...இட்ஸ் யுவர் வொர்க் டோன்ட் பீல் மாம்....
Rate this:
sham - chennai,இந்தியா
27 ஜூன், 2011 - 08:51 Report Abuse
 sham திஸ் இஸ் அக்டிங் இன்னும் எவ்ளோவோ இருக்கு
Rate this:
sambath - harur,இந்தியா
16 மே, 2011 - 13:33 Report Abuse
 sambath “ இப்படி எல்லாம் அழகூடாது .................என்ன இது சின்னபுள்ளதனமா இருக்கு ........................ ”
Rate this:
மேலும் 35 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Saamy 2
  • சாமி 2
  • நடிகர் : விக்ரம் ,
  • நடிகை : கீர்த்தி சுரேஷ்
  • இயக்குனர் :ஹரி
  Tamil New Film Kanmani Pappa
  • கண்மணி பாப்பா
  • நடிகர் : தமன் குமார்
  • நடிகை : மியா ஸ்ரீ
  • இயக்குனர் :ஸ்ரீமணி
  Tamil New Film Abhiyum Anuvum
  • அபியும் அனுவும்
  • நடிகர் : டொவினோ தாமஸ்
  • நடிகை : பியா பாஜ்பாய்
  • இயக்குனர் :பிஆர் விஜயலட்சுமி
  Tamil New Film Pandimuni
  • பாண்டிமுனி
  • நடிகை : நிகிஷா பட்டேல்
  • இயக்குனர் :கஸ்தூரி ராஜா

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in