ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ்த் திரையுலகில் சில சமயம் நடக்கும் விஷயங்கள் எதிர்பாராமலேயே நடந்துவிடும். ஒரே சமயத்தில் ஒரே கதைகள் கொண்ட படங்கள் வெளி வரும், அல்லது ஒரே கிளைமாக்ஸ் கொண்ட படங்கள் வெளியாகும். அதே போல் கடந்த வாரங்களில் ஒரே விளையாட்டை மையமாகக் கொண்ட இரண்டு படங்கள் அடுத்தடுத்து வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளன.
செப்டம்பர் 19ம் தேதி வெளியான 'ஆடாம ஜெயிச்சோமடா' படமும், செப்டம்பர் 26ம் தேதி வெளியான 'ஜீவா' படமும் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்திய படங்கள். ஆனால், இரண்டுமே ஒன்றுக்கொன்று முரண்பட்ட படங்கள், ஆடாம ஜெயிப்பது ஒன்று, ஆடி ஜெயிப்பது மற்றொன்று... 'ஆடாம ஜெயிச்சோமடா' படத்தில் பணத்திற்காக தனது கிரிக்கெட் திறமையை பலி கொடுக்கும் ஒரு வீரனைப் பற்றிப் பார்க்க நேர்ந்தது. அந்த வீரனை விட அவரைச் சுற்றி நடக்கும் சூதாட்டம்தான் அதிகம் காட்டப்பட்டது.
ஆனால், 'ஜீவா' படத்தில் உண்மையான திறமையுடன் முன்னேறி இந்திய அணியில் இடம் பிடிக்க வேண்டும் என்ற வீரனைப் பற்றி பார்க்க நேர்ந்தது. அதே சமயம் இருவருமே 'கிளப்' மேட்ச்சில்தான் படத்தை முடித்து வைத்திருக்கிறார்கள். 'ஆடாம ஜெயிச்சோமடா' படத்தில் கிளப் மேட்ச்சில் விளையாடும் போதுதான் வீரனின் ஊழல் தெரிகிறது. 'ஜீவா' படத்தில் கிளப் மேட்சில்விளையாடும் போதுதான் வீரனின் திறமை வெளிப்படுகிறது.
ஆச்சரியமான இந்த முரண் அடுத்தடுத்த வாரங்களில் நடந்திருப்பது அதிசயம்தான்.