ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ்த் திரையுலகில் தனக்கென தனி இடத்தைப் பிடித்திருப்பவர் இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா. ஆனால், சமீப காலங்களில் இங்கும் ஒரு இடைவெளி விட்டு விட்டார். சில வருடங்களுக்கு முன் பல ஹிட் பாடல்களைக் கொடுத்தவர் தற்போது சராசரியான பாடல்களையே கொடுத்து வருகிறார். 'அஞ்சான்' படப் பாடல்களும் பெரிதாக பேசப்படாத நிலையில், அவருடைய அடுத்த ஹிட்டுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதனிடையே ஒரு இடைவெளிக்குப் பிறகு நேரடி தெலுங்குப் படத்துக்கு இசையமைத்திருக்கிறார் யுவன். பிரபல இயக்குனர் கிருஷ்ணவம்சி இயக்கத்தில் ராம்சரண், காஜல் அகர்வால் நடித்துள்ள 'கோவிந்துடு அந்தாரிவாடிலே' படத்துக்கு அவர் இசையமைத்துள்ளார். சில வாரங்களுக்கு முன் வெளியான இப்படத்தின் பாடல்கள் அங்கு பரபரப்பாகவே பேசப்பட்டு வருகிறது. இன்னும் சில நாட்களில் படம் வெளியாக உள்ளது.
இப்படத்தின் பாடல் காட்சிகளுக்காக தனிக் கவனம் செலுத்தியிருக்கிறாராம் இயக்குனர் கிருஷ்ணவம்சி. பாடல் கம்போசிங்கிலும் சரி, படமாக்கிய போதும் சரி, எடிட்டிங்கிலும் சரி அவரே முழுமையாக அமர்ந்து ஈடுபாட்டுடன் பாடல்கள் பிரமாதமாக வரவேண்டும் என்று கடுமையாக உழைத்திருக்கிறாராம். யுவனின் அப்பாவான இளையராஜா அந்தக் காலத்தில் தெலுங்கில் பல ஹிட் படங்களைக் கொடுத்தவர், இன்றும் அவருக்கு அங்கு ரசிகர்கள் கூட்டம் உண்டு. அப்பாவைப் போலவே யுவனும் அடுத்து வரும் இந்த புதிய படம் மூலம் மீண்டும் சாதிப்பார் என டோலிவுட்டில் பேசிக் கொள்கிறார்களாம்.