14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா |
இந்திய சினிமாவின் பெருமை சொல்லும் முதல் 100 படங்களில் முக்கிய இடம் பிடித்த கிளாசிக் சினிமா, கே.விஸ்வநாத் இயக்கத்தில், தெலுங்கில் 1979-இல் வெளிவந்த சங்கராபரணம் படம். பல விருதுகளை அள்ளி குவித்த இத்திரைப்படம், தற்போது 35 வருடங்களுக்கு பிறகு தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு, நவீன தொழில் நுட்பத்துடன் மெருகேற்றப்பட்டு வருகிற அக்டோபர் 2-ம் தேதி படம் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில், இப்படத்தின் மூலமாக தங்ககாசு வெல்லும் ஒரு அரிய வாய்ப்பை உங்களுக்கு தினமலர் மற்றும் சங்கராபரணம் படக்குழு வழங்க இருக்கிறது. நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் இப்படத்தை பார்த்து சிறப்பான விமர்சனத்தை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். இதில் முதல் சிறந்த விமர்சனத்திற்கு, இந்தப்படத்தை உலக அளவில் வெளியிட இருக்கும் விபி பிலிம்ஸ் சார்பில் புவனா, தங்க நாணயம் பரிசாக வழங்க இருக்கிறார். இதுதவிர 20 பேருக்கு சங்கராபரணம் படத்தில் நடித்த நடிகர்-நடிகையர் கையெழுத்திட்ட ஆடியோ சிடி வழங்கப்பட இருக்கிறது.
போட்டியில் கலந்து கொள்பவர்கள், உங்களது தொலைபேசி எண், இ-மெயில் முகவரி, மற்றும் உங்களது இருப்பிட முகவரி ஆகியவற்றுடன் உங்களது விமர்சனத்தையும் இணைத்து cinecontest@dinamalar.in என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்புங்கள்.சிறந்த விமர்சனத்திற்கு தங்ககாசு காத்திருக்கிறது.
விதிமுறைகள் தினமலருக்கு உட்பட்டது.