ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
ஹவுஸ்புல், ஹவுஸ்புல்-2 படங்களை தொடர்ந்து இயக்குநர் சாஜித் நாடியாவாலா, அதன் மூன்றாம் பாகத்தை எடுக்க தயாராகிவிட்டார். ஆனால் இதில் ஒரு வருத்தமான செய்தி... முந்தைய இரண்டு பாகங்களில் நடித்த ரித்தேஷ் தேஷ்முக் இப்போது மூன்றாகம் பாகத்தில் நடிக்கவில்லை. அவருக்கு பதிலாக க்ருஷ்ணா அபிஷேக் நடிக்க இருக்கிறார். ரித்தேஷ் நடிக்காதது அவரது ரசிகர்களுக்கு வருத்தம் தான் என்றாலும், ஹவுஸ்புல்-3 படத்தை எதிர்நோக்கி ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கலாம். ஏன்னென்றால் முந்தைய படங்களை போன்று இந்தப்படமும் பக்கா காமெடி படமாக உருவாக இருக்கிறது. வழக்கம் போல் அக்ஷ்ய் குமார், அபிஷேக் பச்சன் இதிலும் நடிக்க இருக்கின்றனர். ஏற்கனவே அபிஷேக்-க்ருஷ்ணா இருவரும் போல் பச்சன் படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.