சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
வானவராயன் வல்வராயன், சிகரம் தொடு படங்களில் நடித்திருப்பர் மோனல் கஜ்ஜார். மோஸ்ட் வாண்டட் புதுமுகமும் அவர்தான். ஆனால் அவர் கோபக்கார நடிகை, சம்பளம் அதிகமாக கேட்கிறார். துணைக்கு ஆட்களை நிறைய அழைத்து வருகிறார் என்று ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் அவர் மீது இருக்கிறது.
இதுபற்றி மோனல் கூறியதாவது: நான் கொஞ்சம் முன்கோபிதான். ஆனால் அது சில விநாடிதான் நீடிக்கும். சின்ன வயதிலிருந்தே எனக்கு பிடிக்காதபடி யாராவது நடந்தால் கோபம் வந்துவிடும். அதை மாற்றிக் கொள்ள முடியவில்லை. மாற்றிக் கொள்ள முயற்சிக்கிறேன். ஒரு பெண்ணால் எல்லா நேரமும் சந்தோஷமான மூடிலேயே இருக்க முடியாது என்பதையும் மற்றவர்கள் உணரவேண்டும்.
என் தகுதிக்கு என்ன சம்பளமோ அதைத்தான் கேட்கிறேன். அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்ற இமேஜ் கிடைத்தால் சந்தோஷம்தான். கிளாமர் காட்சியிலோ, முத்தக் காட்சியிலோ நடிப்பதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறேன். அப்படி ஏதாவது இருக்கிறதா என்று கதை சொல்ல வருபவர்களிடம் கேட்கிறேன். உடனே நான் நிபந்தனை விதிப்பதாக வெளியில் சொல்லிவிடுகிறார்கள். சினிமாவில் இப்படியெல்லாம் பிரச்சினைகள் வரும் என்று எனக்குத் தெரியாது. இருந்தாலும் சமாளிக்கிறேன் என்கிறார் மோனல்.