மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா நடிக்கும் 'இது நம்ம ஆளு' படம் பற்றி பல்வேறு தகவல்கள் வந்து கொண்டிருந்தாலும், இன்னொரு பக்கம், சத்தமில்லாமல் வேகவேகமாக வளர்ந்து வருகிறது.
படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் இது நம்ம ஆளு படத்தில் தன் தம்பி குறளரசனை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தி இருக்கிறார் சிம்பு.
இது நம்ம ஆளு படத்திற்காக குறளரசன் உருவாக்கிய பாடல்களில், க்ளைமேக்ஸ் காட்சியில் இடம்பெறும் ஒரு பாடல் தவிர்த்து மற்ற பாடல்கள் அனைத்தும் முழுமையாக முடிந்துவிட்டதாம்.
இந்த தகவலை சிம்புவே 'ட்வீட்' செய்திருக்கிறார்.
அதோடு தனது தம்பி குறளசரனின் இசையில் உருவான பாடல்களைக் கேட்டு மிகவும் சந்தோஷமாக இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.
அக்டோபரில் இது நம்ம ஆளு படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டீஸர் வெளியாக இருக்கிறது.
இதற்கிடையில், இது நம்ம ஆளு படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களுக்கு உண்மையில் இசையமைத்தது குறளரசன் அல்ல, சிம்புவே அனைத்து பாடல்களையும் கம்போஸ் செய்து தன் தம்பி பெயரில் வெளியிடுகிறார் என்று சிலர் சொல்கிறார்கள்.
இது உண்மையா சிம்பு?