பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த ஆயரத்தில் ஒருவன் படம் மீண்டும் டிஜிட்டலில் வெளியாகி வெள்ளிவிழா கொண்டாடியது. அந்த வரிசையில் அடுத்து வெளிவர இருக்கிறது உலகம் சுற்றும் வாலிபன். 1973ம் ஆண்டு வெளிவந்த இந்தப் படத்தை எம்.ஜி.ஆர். இயக்கி தயாரித்திருந்தார். லதா, மஞ்சுளா, நம்பியார், அசோகன், சந்திரகலா இவர்களுடன் தாய்லாந்து நடிகை ஒருவரும் நடித்திருந்தார். எம்.எஸ்.விஸ்வநாதனின் இசையில் உருவான பாடல்கள் பெரிய அளவில் ஹிட்டானது.
பெரிய பட்ஜெட்டில் சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான் நாடுகளில் எடுக்கப்பட்ட படம். அன்றைய ஆளும் கட்சியின் கெடுபிடிகளுக்கு இடையில் பல தடைகளை தாண்டி வெளிவந்து வெள்ளி விழா கொண்டாடிய படம்.
தற்போது இந்தப் படத்தை நவீன முறையில் டிஜிட்டல் படுத்தி வெளியிட இருக்கிறார்கள். திண்டுக்கலை சேர்ந்த சோலைமலை நாகராஜன் இதனை வெளியிடுகிறார். அடுத்த மாதம் முதல் தியேட்டரில் டிரைலர்கள் திரையிடப்படுகிறது.