ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
திரையுலகில் ஹீரோக்களைப் பற்றிய வதந்தி பரவுகிறதோ இல்லையோ, ஹீரோயின்களைப் பற்றிய வதந்தி கண்டிப்பாகப் பரவும். ஆனாலும், ஒரு எல்லை வரை பலரும் அதை வரவேற்கத்தான் செய்கிறார்கள். மார்க்கெட்டில் இருப்பவர்களைப் பற்றித்தான் வதந்தி அதிகம் பரவும் என்பதை அவர்களும் தெரிந்து வைத்துள்ளதால், நல்ல விதத்தில் வதந்திகள் வந்தால் அதை அவர்கள் ரசிக்கத்தான் செய்கிறார்கள். 'கத்தி' படத்தின் நாயகியாக சமந்தாவைப் பற்றிய புது வதந்தி தற்போது டோலிவுட்டில் பரவி வருகிறது.
ஏற்கெனவே அவருக்கும், நடிகர் சித்தார்த்துக்கும் காதல் என்று பரவி வந்த வதந்தியை அடுத்து தற்போது இந்த வதந்தி புதிதாகப் பரவி வருகிறது.
'கத்தி' படத்தின் நாயகி சமந்தா அவருடைய மூக்கில் 'கத்தி'க்கு வேலை வைக்கப் போகிறாராம். சமந்தா ஏற்கெனவே அழகாகத்தான் இருக்கிறார். ஆனாலும், அவருடைய மூக்கு அமைப்பைப் பற்றி அவருக்கு திருப்தி இல்லையாம். அதனால், அதைக் கொஞ்சம் சரி செய்து அழகாக்கிக் கொள்ள லண்டனுக்குச் சென்று ஆபரேஷன் செய்து கொள்ள உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருக்கு இந்த ஆலோசனையை வழங்கியது யார் என்று தெரியவில்லை. ஒரு வேளை மூக்கு ஆபரேஷன் செய்து கொண்ட பின்தான் நடிகை ஸ்ரீதேவி பாலிவுட்டில் நம்பர் 1 இடத்தைப் பிடித்தார் என்ற ராசியை யாராவது சமந்தாவிற்கு சொல்லியிருப்பார்களா எனத் தெரியவில்லை.
இது பற்றி எப்படியும் சமந்தாவே இன்னும் சில நாட்களில் பதிலளித்து விடுவார். அதுவரை இந்த வதந்தி ஊர்வலம் வந்து கொண்டுதானிருக்கும்.